சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா..? அப்போ அதற்கு காரணம் இது தான்..!

Advertisement

Why Do You Get Sleepy After Eating in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு சாப்பிட்டதும் தூக்கம் வருகிறதா..? அதாவது சிலருக்கு மதிய வேளையில் சாப்பிட்டதும் தூக்கம் வரும். இப்படி தூக்கம் வருவது இயல்பான விஷயம் தான். அவ்வளவு ஏன் இந்த பதிவை படிப்பவர்கள் கூட மதியம் சாப்பிட்ட உடன் தூங்குபவராக கூட இருக்கலாம். சரி இதற்கு என்ன காரணம், ஏன் சாப்பிட்ட உடன் தூக்கம் வருகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க நண்பர்களே சாப்பிட்ட உடன் தூக்கம் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சாப்பிட்ட உடன் தூக்கம் வர காரணம் என்ன..? 

சாப்பிட்ட உடன் தூக்கம் வர காரணம் என்ன

பெரும்பாலும் நம்மில் பலருக்கும் சாப்பிட்ட உடன் தூக்கம் வரும். சிலர் சாப்பிட்டாலே தூக்க தூக்கமாக வருகிறது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன என்று இங்கு காணலாம்.

சாப்பிட்ட உடன் தூக்கம் வருவதற்கு இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மருதாணி போட்டவுடன் கைகள் சிவக்க காரணம் என்ன தெரியுமா

சாப்பிட்ட உடன் தூக்கம் வர காரணம் என்ன

ஒரு நபர் சாப்பிட்ட பிறகு சிறுகுடலுக்கான இரத்த ஓட்டம் வியத்தகு முறையில் அதிகரிக்கிறது என்று ஜப்பானின் கியோரின் பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பேராசிரியரான டாக்டர் டோமோனோரி கிஷினோ கூறுகிறார்.

அதாவது செரிமானத்திற்கு எரிபொருளாக குடலுக்குள் இரத்தம் செலுத்தப்படுவதால், மூளைக்கு இரத்த ஓட்டத்தில் தொடர்புடைய வீழ்ச்சி தூக்கத்தின் உணர்வுகளைத் தூண்டும் என்று கூறப்படுகிறது. 

பறவைகள் எப்படி பறக்கிறது.. அதற்கு காரணம் என்ன தெரியுமா

அதேபோல கொழுப்பு, கார்போஹைட்ரேட் அல்லது கலோரிகள் அதிகம் உள்ள உணவுகள் தூக்கத்தை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் காலை உணவை சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிட்ட பிறகு பெருமூளை இரத்த ஓட்டத்தில் ஒரு அளவு சரிந்ததைக் கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக காலை உணவைத் தவிர்த்து, மதிய உணவை சாப்பிட்ட பிறகு இரத்த ஓட்டத்தில் அதிக மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் உடலில் அதிக சுமையை ஏற்படுத்தக்கூடும். இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement