ஐஸ் கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா..?

Why Does An Ice Cube Float in Water

நண்பர்களே வணக்கம்..! பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு சுவாரஸ்யமான பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஐஸ் கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்கிறது என்று காணப் போகின்றோம். சரி இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்..! சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா

ஐஸ் கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்கிறது..?

Why Does An Ice Cube Float in Water

இன்றைய நிலையில் அனைவரின் வீட்டிலுமே பிரிட்ஜ் இருக்கிறது. பிரிட்ஜ் என்று சொன்னவுடன் நாம் அனைவருக்குமே நினைவில் வருவது ஐஸ்கட்டி தான். காரணம் பலரும் ஐஸ்கட்டியை சாதாரணமாகவே சாப்பிடுவார்கள்.

சரி உங்கள் வீட்டிலும் பிரிட்ஜ் இருக்கும் அல்லவா..! நீங்கள் என்றாவது தண்ணீரில் ஐஸ்கட்டியை போட்டு பார்த்திருக்கிறீர்களா..? அப்படி பார்த்திருந்தால் ஐஸ்கட்டி தண்ணீரில் மிதப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் ஐஸ்கட்டிகளை போட்டால் அது மிதக்கும். அதுவே கடலில் பல டன் எடையுள்ள பனிப்பாறைகள் மூழ்காமல் மிதந்தால் அது நமக்கு ஆச்சர்யமாக தான் இருக்கும்.

நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா

 

சரி ஏன் ஐஸ்கட்டி தண்ணீரில் போட்டதும் மிதக்கிறது என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதற்கான விடையை இங்கு காணலாம்.

பொதுவாக நீர் 2 ஹைட்ரஜன் மூலக்கூறுகளையும் 1 ஆக்சிஜன் மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. அதை தான் நாம் H2O என்று சொல்கின்றோம். அதுபோல நீர் அது இருக்கும் இடத்தை பொறுத்து மூலக்கூறுகளை மாற்றிக்கொண்டே இருக்கும்.

 ஆனால் ஹைட்ரஜன் பிணைப்பானது வலிமையானதாகவே இருக்காது. அதுவே நீர் வெப்ப அளவு குறையும் போது அது ஐஸ்கட்டியாக மாறிவிடும். அப்போது ஹைட்ரஜன் பிணைப்பு மிகவும் வலிமையானதாக இருக்கும். அப்படி இருக்கும் போது ஐஸ்கட்டியின் அடர்த்தி நீரை விட குறைவாக இருக்கும். அதன் காரணமாக தான் பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது. 

அதாவது ஐஸ்கட்டி நீரை விட லேசானதாக இருப்பதால், நீர் ஐஸ்கட்டியை இடமாற்றம் செய்து மேல் மிதக்கச் செய்கிறது. அதனால் தான் ஐஸ்கட்டி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கிறது.

👉 இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking