செம்பு அணிகலன்கள் அணியும் போது ஏன் உடலில் பச்சை நிறம் தோன்றுகிறது தெரியுமா..?

Advertisement

Why Does Green Color Appear When Wearing Copper Jewellery in Tamil 

பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் அணிகலன்கள் அணியும் பழக்கம் இருக்கும். அவ்வாறு அணியும் அணிகலன்களில் செம்பு அணிகலனும் ஒன்று. அந்த வகையில் செம்பு அணிகலன்களை அணியும் போது சில நாட்களில் நமது உடலில் பச்சை நிறம் போல் தோன்றும். இவ்வாறு ஏன் நமது உடலில் உடம்பில் பச்சை நிறம் வருகிறது ஏன் என்று நீங்கள் சிந்தித்து இருக்கீர்கள் என்றால் இந்த பதிவு  உங்களுக்கானது தான். பொதுவாக செம்பு அதிக மருத்துவ குணத்தை கொண்டது என்று நாம் அறிந்து இருப்போம். அதில் குறிப்பாக பெருமூளை வலி, மூட்டுகளில் உள்ள அழற்சி, மூட்டு பிரச்சனைகள், ஜிங்க் குறைபாடு போன்றவற்றை செம்பு நகைகளை அணிவதால் சரிசெய்து கொள்ளலாம் என்று கூறுவார்கள். 

இயற்கையாகவே செம்பு அணிகலன்கள் அதிக மருத்துவ குணம் கொண்டது. செம்பு அணிகலன்கள் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் செம்பு பாத்திரத்தை நாம் பயன்படுத்துவதால் பல நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றை சீராக்குவதில் செம்பு மோதிரம் முக்கிய பங்கு வகுக்கின்றது. செம்பு பாத்திரத்தில் சாப்பிடுவது மற்றும் தண்ணீர் குடிப்பது கூட நம் உடல்நலத்திற்கு நன்மையை தரக்கூடியது. இத்தகைய நன்மை உடைய செம்பு உடலில் அணியும் போது ஏன் பச்சை நிறத்தை ஏற்படுத்திகிறது இந்த மாற்றத்தால் நம் உடலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

ஏன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் செம்பு பாத்திரத்தில் மட்டும் தருகிறார்கள் காரணம் தெரியுமா.?

செம்பு அணிகலன்களை அணியும் போது ஏன் பச்சை நிறம் வர காரணம்: 

செம்பு அணிகலன்களை அணியும் போது ஏன் பச்சை நிறம் வர காரணம்

  • பெரும்பாலும் நாம் செம்பு அணிகலன்களை அணிந்து கொண்டு வெயில் சென்றாலோ அல்லது வெயிலில் நின்றாலோ நமது உடம்பில் இருந்து வியர்வை வெளிவரும். இவ்வாறு வெளிவரும் வியர்வை, அதேபோல் நமது முகத்தில் இருந்து வெளியாகும் எண்ணெய் பசை காரணமாகவும் காப்பர் கார்பனேட் நிகழ்வால் ஆக்ஸிடேஷன் வினை ஏற்பட்டு நமது உடலில் பச்சை நிறமானது ஏற்படுகிறது. 
  •  நமது உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும் போது செம்பு அணிகலன்கள் அணியும் போது பச்சை நிறமானது உண்டாகுகிறது. 
  • நாம் சுவாசிக்கும் காற்றில் சல்பர் அதிகம் காணப்பட்டாலோ அல்லது ஈரப்பசை அதிகம் காணப்பட்டாலோ நாம் அணிந்து இருக்கும் செம்பு அணிகலன்கள் உடனே உடலில் பச்சை நிறத்த ஏற்படுத்தும்.
  • எனவே நமது உடலில் ஏற்படும் இதுபோல பச்சை நிறம் செம்பு அணிகலன்களை அணியும் போது வராமல் இருக்க வேண்டும் என்றால, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும். நம் உடம்பில் பச்சை நிறம் படலம் ஏற்பட்டால் அதை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

செம்பு பாத்திரம் தீமைகள்

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் ->  Thinking 
Advertisement