தோசைக்கு ஏன் தோசை என்ற பெயர் வந்தது தெரியுமா..?

Advertisement

Why Dosa Gets the Name Dosa in Tamil | தோசை பெயர் காரணம் | தோசை தமிழ் பெயர்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இப்பொழுது நாம் ஒரு பொருளை பார்க்கின்றோம் என்றால் அதற்கான பெயர் எவ்வாறு வந்தது அது எவ்வாறு உருவானது அதனை கண்டுபிடித்தவர் யார் என்ற பல கேள்விகள் நமது மனதில் எழும்.

அப்படி உங்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் தான் நமது பதிவின் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவான தோசைக்கு ஏன் தோசை என்ற பெயர் வந்தது என்றும் அதனை யார் கண்டுபிடித்தது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா இது தெரியாம போச்சே

தோசைக்கு ஏன் தோசை என்ற பெயர் வந்தது..?

Why Dosa Gets the Name Dosa in Tamil

  • இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று தான் தோசை. நம்மில் பலருக்கும் பிடித்த உணவு என்றால் அது தோசை தான். இன்றைய சூழலில் தோசையில் பல வகைகள் வந்துள்ளன.
  • அதாவது முட்டை தோசை, மசாலா தோசை, பொடி தோசை மற்றும் வெங்காய தோசை என பல வகைகள் உருவாகியுள்ளது. இப்பொழுது இந்த தோசை உருவாகிய கதையை அறிந்து கொள்ளலாம் வாங்க..!
  •  இந்த தோசை கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரத்தில் முதன் முதலாவதாக உருவானது.  இதை உறுதிப்படுத்தும் வகையில் கி.பி 1126 ஆம் ஆண்டு கர்நாடகாவை ஆண்ட சாளுக்கிய மன்னர் மூன்றாம் சோமேஸ்வரர், அவரது மனசோல்லாசா என்ற புத்தகத்தில் தோசைக்கான செய்முறையை தோசகா என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த தோசையை உடுப்பியை சேர்ந்த ஒரு பிராமண சமையற்காரர் தான் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இந்த பிராமணர் தங்களின் மத எதிர்ப்புகளை பொறுத்து கொள்ள முடியாமல் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தான் இந்த தோசையை உருவாக்கினார்.
  • அதாவது பிராமணர்கள் மது அருந்துவது அவர்களின் மதத்தில் தவறான ஒரு விஷயம் ஆகும்.
  • ஆனால் இந்த பிராமணருக்கு மது அருந்த வேண்டும் என்ற ஆசை வந்தது அதனை நிறைவேற்றி கொள்வதற்காக இவர் அரிசியை வைத்து ஒரு கலவையை உருவாக்கி அதனை புளிக்க வைத்தார்.
  • ஆனால் அந்த கலவை அவர் எண்ணியது போல் அது மதுவாக மாறவில்லை. அதனால் அந்த கலவையை ஒரு சூடான பாத்திரத்தில் ஊற்றி, சுற்றிலும் பரப்பினார். இதற்கு அவர் தோஷம் என்று பெயர் வைத்தார். அதுவே காலப்போக்கில் தோசை என்று மாறியது.

தோசை தமிழ் பெயர்:

தோசை என்பதை அக்காலத்தில் தோயப்பம் என்று கூறினார்கள். இதுவே இதன் தமிழ் பெயராகவும் இருக்கக்கூடும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மல்லிகை பூ என்ற பெயர் வந்தற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking

 

Advertisement