கஷ்டமர்கேர் குரல் ஏன் பெண் குரலாக உள்ளது தெரியுமா..?

Advertisement

Why Female Voice in Tamil

பொதுவாக அனைவருமே இந்த குரலை கேட்காமல் இருப்பது இல்லை. ஆனால் ஏதாவது ஒரு வகையில் நாம் கேட்டிருப்போம். அப்படி என்ன என்று யோசிப்பீர்கள்.  வேறு ஒன்னும் இல்லை கஸ்டமர்கேர் குரல் தான். ஏதாவது ஒரு வகையை சார்ந்து அது உங்கள் போனிற்கு கால் வரும் அல்லது போன் நீங்கள் அவர்களுக்கு பண்ணியிருப்பீர்கள். அப்போது நீங்கள் யோசித்தது உண்டா ஏன் அனைத்து கஸ்டமர் கேரும் பெண் குரலாக உள்ளது என்று.? அதற்கு காரணங்கள் தேடியது உண்டா அப்படி நீங்கள் தேடி உங்களுக்கான பதில்கள் கிடைத்தது உண்டா..? அப்படி கிடைக்கவில்லை என்றால் அதற்கான பதிலை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கஷ்டமர் கேர் ஏன் பெண் குரலாக உள்ளது தெரியுமா- Why Female Voice in Tamil:

கஸ்டமர் கேர் பெண் குரலாக இருக்க 3 காரணங்கள் என்ன தெரியுமா..? முதல் காரணம் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னாடி, அது எந்த குரலை கேட்க ஆரம்பிக்கிறது என்றால் அது அம்மாவின் குரல் தான். அது பெண் குரலாக இருக்கும். அதனை 2003 ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதனால் மனிதர்களுக்கு பெண் குரலுக்கும் இருக்கின்ற பந்தம் மனிதன் பிறப்பதற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. இதனால் மனிதர்களுடைய மூளை பெண் குரலை விரும்புகின்ற மாதிரி உள்ளது.

நகம் வெட்டியில் 2 கத்திகள் ஏன் இருக்கிறது தெரியுமா

எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி ஆண் குரலை கண்டுபிடிக்கிறதை விட அனைவருக்கும் பிடிக்கும் பெண் குரலை கண்டுபிடிக்கிறது ஈசி அப்படி என்று Stanford University professor ஆன clifford nass ஆய்வில் சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது காரணம் பெண் குரல் தான் ஆண் குரலை விட மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும்.

மூன்றாவது காரணம் ஆரம்பத்திலிருந்து பெண் குரலை தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதால் இதற்கு தான் டேட்டா அதிகம் உள்ளது. இதனால் தான் ஆண்  குரலை விட பெண் குரல் அதிகமாக இருக்க காரணம் ஆகும்.

கேஸ் சிலிண்டருக்கு அடியில் இந்த ஓட்டை ஏன் இருக்கிறது தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement