Why is Chokkapan Lit on Karthikai Day in Tamil | சொக்கப்பனை வரலாறு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக கார்த்திகை தீப திருநாளில் ஏன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. சொக்கப்பனை என்பது, கார்த்திகை தீப திருநாள் அன்று, சிவன் கோவில்களில் நடைபெறும் விழாவாகும். இந்நிகழ்வு பெருமாள் கோவில் மற்றும் முருகன் கோவில்களிலும் நடைபெறுகிறது.
பனை மரத்தை வெட்டி, கோவிலின் முன்புறம் கோபுரம் வடிவில் வைத்து கட்டி, அதன் மேல், பனை ஓலைகளை வைத்து கூம்பு போன்று அமைப்பார்கள். இதுவே, சொக்கப்பனை என்று அழைக்கப்டுகிறது. கார்த்திகை நாளில் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள் என்று தெரியும். ஆனால், ஏன் கொளுத்துகிறார்கள்.? என்று யாருக்குமே தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
கார்த்திகை நாளில் சொக்கப்பனை ஏன் கொளுத்துகிறார்கள்.?
- திருக்கார்த்திகை தினத்தில் சிவ பெருமான், விஷ்ணு பகவான், முருகப்பெருமான் கோவில்களில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம். சொக்கப்பனை என்பது, சொர்க்கப்பனை, சுவர்க்கப்பனை, சொக்கர்பனை என்பது திரிந்துபோய் பேச்சுவழக்கில் சொக்கப்பனை என்றாகிவிட்டது.
- சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தினையும், அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு ஆகியோருக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், கோவில்களில் சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
- பனை ஓலை கொண்டு, கோபுர வடிவில் வடிவம் செய்து, அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்தால் பெரும் முக்தியை தரும் என்பது ஆன்றோர்களின் வாக்கு.
- பனைமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்தும் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.
- பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், தேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொக்கப்பனை அமைந்துள்ளது.
கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா.?
- கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய காரணம், கார்த்திகை மாதத்தில் பயிர்கள் நன்றாக விளைந்து செழித்து இருக்கும். அப்போது, பூச்சிகள் பயிர்களை அதிகம் பாதிக்குமாம். அதனால், வீடுகளில் விளக்கு ஏற்றுவர்களாம்.
- விளக்கு சூட்டிற்கு அந்த பூச்சிகள் மாய்ந்து போகுமாம். இதன் காரணமாக தான் கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டில் விளக்கு ஏற்றியும், கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தியும் அக்காலத்தில் வழிபாடு செய்தார்கள் என்று கூறப்படுகிறது.
- மேலும், இறைவன் ஜோதி ரூபமானவன் என்பதாலும், அவனை ஜோதி ரூபமாக வழிபட நெய் மற்றும் எண்ணெய் உபயோகப்படுத்தாத காலத்தில் வழிபாடு செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
- பனை ஓலையை எரிப்பதால் ஏற்படும் புகையானது, மனிதனுக்கு எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் விஷ பூச்சிகளை கொள்ளும் நச்சுத்தன்மை அந்த புகையில் இருப்பதால், சொக்கப்பனை கொளுத்தினார்கள்.
- சொக்கப்பனை கொளுத்தி முடித்ததும், அதன் சாம்பலை எடுத்து நெற்றியில் பூசி கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல், அந்த சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
- சொக்கப்பனை என்பது, மருத்துவ குணம் நிறைந்த பனை ஓலையினை கோவில்களின் முன் கொளுத்தி செய்யப்படும் வெளிப்பாடாகும்.
- மேலும், மனிதர்களும் பனை மரத்தின் பாகங்கள் போல், அனைவருக்கும் உபயோகமாக இருந்தால், இந்த ஜென்மத்திலேயே முக்தி பெற்று, சொர்க்கத்தை அடைய முடியும் என்று தெரிவிப்பதற்காகவும் சொக்கப்பனை கொளுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் -> | Thinking |