ஆங்கிலத்தில் NUMBER என்பதை சுருக்கி ஏன் No என்று எழுதுகிறோம் தெரியுமா..? இதனால் தான்..!

Advertisement

Why do We Abbreviate Number as No in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆங்கிலத்தில் NUMBER என்பதை சுருக்கி ஏன் No என்று எழுதுகிறோம் (Why is Number Shortened to No in Tamil) என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் அனைவருமே ஆங்கிலத்தில் Number என்பதை சுருக்கி No என்று எழுதுவோம். எடுத்துக்காட்டாக, Phone Number என்பதை எழுதும் போது சுருக்கி Phone No என்று எழுதுவோம். இதுபோன்ற பல இடங்களில் Number -க்கு பதிலாக No என்று எழுதி  இருப்போம் மற்றும் பல இடங்களில் எழுதி இருப்பதை பார்த்து இருப்போம்.

அதற்கான காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் ஆங்கிலத்தில் NUMBER என்பதை சுருக்கி No என்று எழுதுவதற்கான காரணம் என்ன என்பதை விவரித்துள்ளோம்.

ஏன் Hotel Room -களில் கடிகாரம் இருப்பதில்லை..! காரணம் தெரியுமா..?

Why is Number Shortened to No in Tamil:

நாம் அனைவருமே Number என்பதை No என்று எழுதுவது வழக்கம். அதிலும் குறிப்பாக டேபிள், வரிசை எண், கடிதம் உள்ளிட்ட பலவற்றில் இவ்வாறு எழுதி இருப்பதை பார்த்து இருப்போம், நாமும் எழுதி இருப்போம். மேலும், Mobile Number என்பதை ID கார்டு போன்ற அனைத்திலும் Mobile No என்று எழுதி இருக்கும்.

Why is Number Shortened to No in Tamil

இவ்வாறாக எல்லா இடங்களிலும் Number என்பதை சுருக்கி No என்று எழுதுகிறோமே, ஆனால் இந்த Number என்பதில் O என்ற வார்த்தையே இல்லையே என்று நாம் யோசித்து இருப்போம். இதோ அதற்கான பதில்.

 Number என்ற சொல்லானது லத்தின் மொழியில் NUMERO என்பதில் இருந்து வந்தது ஆகும். NUMERO என்ற வார்த்தையின் முதல் எழுத்தான N -னும் கடைசி எழுத்தான O -வும் இணைந்தே NO என்று குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக தான் Number என்பதை சுருக்கி NO என்று எழுதி வருகிறோம்.  
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement