சோப்பு வெவ்வேறு நிறத்தில் இருந்தாலும் அதில் இருந்து வரும் நுரை மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்க காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Do You Know Why Soap Foam is White in Colour  

நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் சோப் என்பதே ஒன்று இல்லமால் இருந்தது. அப்படி இருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் தினமும் சுத்தமாக குளித்துக்கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் இந்த நவீனகாலத்தில் சோப் மற்றும் ஷாம்பு இல்லாமல் யாரும் குளிப்பதே இல்லை. அதுமட்டும் இல்லாமல் ஒரு வீட்டில் 4 நபர்கள் இருந்தால் 4 நபர்களும் அவர்களுக்கு பிடித்த மாதிரியான நிறத்தில் மற்றும் வாசனையில் உள்ள சோப்பினை தான் பயன்படுத்தி வருகிறார்கள். என்ன தான் நாம் வெவ்வேறு நிறத்தில் உள்ள சோப்பினை பயன்படுத்தினாலும் கூட அதில் இருந்து வரும் நுரையின் நிறம் என்னவோ வெள்ளை நிறத்தில் தான் இருக்கிறது. இதனை நீங்கள் சிந்தித்தது உண்டா..? அதற்கான காரணம் என்ன தெரியுமா..? இந்த இரண்டிக்கான பதிலையும் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஏன் சோப்பு நுரை வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது:

சோப் என்பது நம்முடைய உடலில் இருக்கும் அழுக்கினை நீக்குவதற்காக பயன்படுத்த படுகிறது. இதற்கு அடுத்ததாக நம்முடைய உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் துறுநாற்றத்தினை வராமல் இருக்க செய்யவும் பயன்படுகிறது.

சோப் என்ற ஒரே வார்த்தையில் இருந்தாலும் கூட அதில் நிறைய வகைகள் மற்றும் சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, ஆரஞ்சு, பச்சை மற்றும் கருப்பு என நிறைய வண்ணங்கள் உள்ளது. அதில் நமக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதனை தான் நாம் வாங்கி பயன்படுத்துகின்றோம்.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. அதாவது சோப்பின் நிறம் வெவ்வேறாக இருந்தாலும் அதில் இருந்து வரும் நுரை மட்டும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்👇👇
எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா..

 இவ்வாறு இருப்பதற்கான காரணம் என்னவென்றால்… நாம் பயன்படுத்தும் சோப்பின் மேற்பகுதியில் காணப்படும் மெல்லிய அடுக்கானது குமிழ்கள் சூழ்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்த சோப்பினை நாம் தண்ணீரில் நனைக்கும் போது அத்தகைய குமிழ்கள் மீது ஒளியானது பட்டவுடன் துகள்கள் ஆனது வெவ்வேறு திசைகளில் பட்டு சிதறல் அடைய செய்கிறது. இத்தகைய நிகழ்வின் காரணமாக தான் சோப் நுரை வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.  

இதுவே அனைத்து விதமான சோப்பின் நுரையும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா.. 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement