Why is The Banana Curved
பழ வகைகள் என்றாலே அதில் நிறைய வகையான சத்துக்கள் உள்ளது. அதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தோம் என்றால் முதலில் நாம் சாப்பிடும் பழம் வாழைப்பழம் தான். இத்தகைய வாழைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டும் இல்லாமல் வாழைப்பழத்தில் நிறைய வகைகளும் உள்ளது. நாம் அதிகமாக சாப்பிடும் வாழைப்பழத்தில் தெரிந்து ஒன்று என்றால் இது மட்டும் தான். ஆனால் இந்த வாழைப்பழத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு தகவலும் உள்ளது. அதாவது நாம் சாப்பிடும் வாழைப்பழம் ஏன் வளைந்து இருக்கிறது என்று சிந்தித்து இருக்கிறீர்களா. எனவே வாழைப்பழம் எதனால் வளைந்து இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
வாழைப்பழம் ஏன் வளைந்து இருக்கிறது:
பொதுவாக நம்முடைய வீட்டில் வாழைப்பழம் இருந்தால் அதனை எடுத்து சாப்பிடுவோம். அவ்வாறு வாழைப்பழம் சாப்பிடும் போது அது நல்ல பழமாக இருக்கிறதா இல்லை அழுகிய நிலையில் இருக்கிறதா என்று கவனிப்போம்.
அதன் பிறகு நமக்கு எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டும் என்று விருப்பம் உள்ளதோ அதனை சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம்.
வாழைப்பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் C, இரும்புச்சத்து, மெக்னீசியம், சோடியம், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல விதமான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் சாப்பிடும் அனைத்து வாழைப்பழங்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஏனென்றால் ஒரு வாழைப்பழம் நேராக இருக்கும் மற்ற சில வாழைப்பழம் வளைந்து இருக்கும். எதனால் இதுமாதிரி உள்ளது என்று நாம் யோசித்தது இல்லை. ஆனால் இதற்கான காரணம் ஒன்று உள்ளது. மேலும் படிக்க
அதாவது வாழைப்பழம் ஏன் நேராக இல்லாமல் வளைந்து இருக்கிறது என்றால்..? அதாவது வாழைப்பழம் எதிர்மறை ஜியோட்ரோபிசம் என்ற நிகழ்வின் விளைவாக தான் வளைந்து காணப்படுகிறது.
வாழைப்பழம் ஆனது சின்னதில் இருந்து வளரும் தன்மை கொண்டது. அதனால் ஆரம்ப நிலையில் தரையை நோக்கி வாழைப்பழம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக சூரியனை நோக்கி வளருவதால் அதனுடைய வடிவம் ஆனது வளைந்து காணப்படுகிறது. இதுவே வாழைப்பழம் வளைந்து இருப்பதற்கான காரணம் ஆகும்.இதையும் படியுங்கள்⇒ ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |