ரூபாய் நோட்டுகள்
தினமும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தினையும் பூர்த்தி செய்வதற்கு பணம் தான் தேவைப்படுகிறது. அத்தகைய பணத்தினை நாம் சம்பாதித்தால் மட்டும் தான் பெற முடியும். இத்தகைய பணத்தினை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. ஏனென்றால் பணம் என்பது ஒற்றை சொல்லாக இருந்தாலும் கூட அதில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் என இரண்டு விதமாக இருக்கிறது. நாணயங்களில் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் என்றும், ரூபாய் நோட்டுகளில் 10 ரூபாய், 20 மற்றும் 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் என்றும் உள்ளது. இவ்வாறு நாம் தினமும் பயன்படுத்தும் நோட்டுகள் அனைத்தும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் ரூபாய் நோட்டுகளில் நம்மை யோசிக்க வைக்கக்கூடிய ஒன்றும் உள்ளது. அதாவது இந்திய ரூபாய் நோட்டுகளின் முன் பக்கத்தில் சாய்ந்த கோடுகள் இருக்கிறது. இத்தகைய கோட்டிற்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Why is There Lines on Indian Currency Notes:
இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இவற்றை எல்லாம் அச்சிடுவது அல்லது தயாரிப்பது போன்ற அனைத்தினையும் இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தான் முழு பொறுப்புடன் செயல்படுத்து வருகிறது.
அதுபோல இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அனைத்தும் ஒரே நிறத்திலோ அல்லது ஒரே வடிவிலோ இருப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொன்றும் அதனுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு தான் அச்சிடப்படுகிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில் அத்தகைய ரூபாய் நோட்டுகளின் முனையில் வெவ்வேறு விதமாக கோடுகளும் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் யாரும் எவ்வளவு ரூபாய் என்று பார்ப்போமே தவிர அதில் என்ன கோடு இருக்கிறது என்று அவ்வளவாக கவனிக்க மாட்டோம்.
இதையும் படியுங்கள்👇👇
ரயிலின் மேல் எதற்கு இந்த வட்ட வளையம் பொறுத்தப்பட்டுள்ளது தெரியுமா..
ஆனால் அதுமாதிரி கொடுக்கப்பட்டிருக்கும் கோட்டிற்கு பின்பு ஒரு காரணம் உள்ளது. ஏன் இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் கோடுகள் உள்ளன தெரியுமா..?அதாவது கண் உள்ளவர்கள் எவ்வளவு ரூபாய் நோட்டு இது என்று பார்த்து கண்டு பிடித்து விடலாம்.
ஆனால் கண் தெரியாத நபர்களுக்கு இந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்று தெரியாமல் இருக்கும் என்ற காரணத்தினாலும், அத்தகைய நோட்டுகளின் மதிப்பினை கண்டுபிடிப்பதற்கான நோக்கத்தோடும் தான் இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் கோண ரத்தக் கோடுகள் அதனுடைய மதிப்பிற்க்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் 100 ரூபாய் நோட்டுகளின் முன்பக்கத்தில் 4 கோண ரத்தக்கோடுகளும், 200 ரூபாய் நோட்டுகளில் முன்பக்கத்தில் 4 கோண ரத்தக்கோடுகளும் அதன் நடுவே 2 பூஜ்ஜியமும், 500 ரூபாய் நோட்டுகளின் முன்பக்கம் 5 கோண ரத்தக்கோடுகளும் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளின் முன்பக்கத்தில் 7 கோண இரத்தக்கோடுகளும் அதனுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்திய ரூபாய் நாடுகளின் முன் பக்கத்தில் சாய்ந்த கோடுகள் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் ஆகும்.
இதையும் படியுங்கள்👇👇 ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் கோடுகள் ஏன் இருக்கிறது.? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |