பூஜை அறை தண்ணீர்
அனைவரது வீட்டிலும் பூஜை அறையில் தண்ணீர் ஒரு சொம்பிலோ அல்லது வேறு சிறிய பத்திரத்திலேயோ தண்ணீர் வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்கிறோம் என்பதே சிலருக்கு தெரியாது. மற்றவர்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள் அதேபோல் நாமும் வைப்போம் என்று வைப்பார்கள். இன்னும் ஒரு சிலர் பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் தெய்வங்கள் தண்ணீரை பருகும் என்று கூறுவார்கள். பூஜை அறையில் தண்ணீர் வைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறலாம். இதனை தவிர்த்து ஒரு காரணம் இருக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பூஜை அறையில் கடவுள்களுக்கு நெய்வேத்தியம் படைக்கும்போது ஒரு சொம்பில் தண்ணீர் வைக்கும் பழக்கம் உளள்து. நாம் எப்படி உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிக்கின்றோ அதேபோல், தெய்வங்களும் தண்ணீர் பருகும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இதனை தவிர்த்து ஒரு முக்கியான காரணம் ஒன்று உள்ளது அதனை பற்றி பார்க்கலாம் வாங்க.
அமாவாசை அன்று ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று தெரியுமா..?
Why Keep Water in The Pooja Room in Tamil:
தண்ணீர் என்பது நேர்மறை சக்திகளை ஈர்க்கக்கூடிய அற்புதமான பொருள். அப்படிப்பட்ட தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம் நமக்கும் நம் குடும்பத்திற்கும் நேர்மறை ஆற்றல் பெருகும். அதாவது, தினமும் பூஜை றையில் தண்ணீர் வைத்து தெய்வங்களுக்குரிய பாடல் அல்லது மந்திரங்களை உச்சரித்து வழிப்படுவதன் மூலம் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். அதாவது, அந்த தண்ணீர் முழுவதும் நேர்மறை ஆற்றல்கள் நிரம்பி இருக்கும். பூஜை முடிந்ததும் சிறிது நேரம் கழித்து இந்த தண்ணீரை எடுத்து குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தீர்த்தம் போல் பருகி வர நன்மை உண்டாகும். இதற்காக, நம் முன்னோர்கள் பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிப்படும் முறையை பின்பற்றி வந்தார்கள்.
மேலும், பூஜை அறையில் நாம் பூஜை செய்யும்போது, ஐம்பூதங்களும் இருக்க வேண்டும். அதாவது, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை இருக்க வேண்டும். அதில், முதலாவதாக ஆகாயம் என்பது பூஜை அறையில் வியாபித்து இருக்கும். நெருப்பு நாம் ஏற்றும் விளக்கில் இருக்கும். அதேபோல், நிலம் நம்மை தாங்கி இருக்கும். காற்று இயற்கையாகவே இருக்கிறது. ஆனால், பூஜை அறையில் தண்ணீர் மட்டும் இருக்காது. அதற்காகத்தான் பூஜை அறையில் ஐம்பூதங்களில் ஒன்றான நீரினை வைக்க வேண்டும். இவ்வாறு பூஜை அறையில் ஐம்பூதங்கள் இருந்தால், ஐம்பூதங்களின் சக்தி நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
நாம் பூஜை செய்யும்போது, மணி அடித்து சுவாமி தரிசனம் செய்வதால் துர்சக்திகள் நெருங்காது. அதேபோல், பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிப்படுவதன் மூலம் துர்சக்திகள் வீட்டிற்குள் வராது.
கோவிலில் அர்ச்சனை செய்வது ஏன்.?
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |