Why Women Don’t Go to Sabarimala in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது.? என்பதற்கான காரணத்தை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். நாம் அனைவருமே சபரிமலை கோவில் பற்றி பல கதைகளை கேட்டு இருப்போம். அவற்றில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது என்பதற்கான உண்மையான காரணம் மட்டும் இன்றுவரை பலருக்கு தெரிவதில்லை. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வித்தியாசமான கட்டுப்பாடுகளும், வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அப்படி சபரிமலையில் கடைபிடிக்கப்படும் முக்கியமான கட்டுப்பாடு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பது தான். ஏன் இப்படி சொல்கிறார்கள்.? யார் இந்த கட்டுப்பாட்டை விதித்தது உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஐயப்ப பக்தர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டும் ஆடை அணிகிறார்கள் தெரியுமா.? இதுதான் காரணம்.!
Why Ladies Should Not Go To Sabarimala in Tamil:
புராண கதைகளின்படி, சுவாமி ஐயப்பன் சபரிமலையில் நித்ய பிரம்மச்சாரியாக தவம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஐயப்பன் ஒரு மனதாக, விரத முறைகளை கடைபிடித்து, தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி, அவர்கள் வேண்டும் வரங்களை தருவதற்காக ஐயப்பன் சபரிமலையில் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. எப்போது, சபரிமலைக்கு கன்னி சாமிகள் வராமல் இருக்கிறார்களோ, அதுவரை நான் பிரம்மச்சரியத்துடன் தவம் செய்ய உள்ளதாக சுவாமி ஐயப்பனே சொன்னதாக கூறபடுகிறது.
அதுமட்டுமில்லாமல், புராணங்களில் சொல்லப்படும் கதையின்படி, மகிஷியாக அரக்கியை வதம் செய்வதற்காக தான் ஐயப்பன் அவதாரம் எடுத்தார். சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என மகிஷி பிரம்மாவிடம் வரம் வாங்கினாள். அதனால், பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து பிறந்தவர் தான் ஐயப்பன்.
மகிஷியை ஐயப்பன் வதம் செய்த பிறகு, சாபத்தால் அவளுக்கு ஏற்பட்ட அரக்கி உருவம் நீங்கி, அழகிய பெண்ணாக மாறினாள். தன்னுடைய சாபத்தை போக்கிய நீங்களே தன்னை திருமணம் செய்து கொளுங்கள் என்று, மகிஷி, ஐயப்பனிடம் கேட்டாள்.
ஆனால், ஐயப்பனோ அதனை ஏற்க மறுத்து, தன்னுடைய பக்தர்களை காத்து அருள் செய்வது மட்டுமே தன்னுடைய நோக்கம் என்று கூறினார்.
ஆனால், அதனை கேட்காமல், மகிஷி தன்னை மணந்து கொள்ளும் படி அழுது மண்றாடுகிறாள். அதனால், அவள் மீது இரக்கம் கொண்ட ஐயப்பன், எப்போது தன்னை காண கன்னி சாமிகள் வருகிறது முற்றிலுமாக நிற்கிறதோ அப்போது நான் உன்னை திருமணம் செய்து கொண்டு, உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஐயப்பன் மகிஷிக்கு வாக்கு கொடுக்கிறார்.
ஐயப்பனின் கால்கள் ஏன் கட்டப்பட்டிருக்கிறது என்று தெரியுமா.?
அதனால், எப்போது கன்னி சாமிகள் வராமல் இருக்கிறாரகள் என்று காத்துகொண்டு ஐயப்பன் சன்னதிக்கு அருகிலேயே தனியாக சன்னதி கொண்டு, மாளிகைப்புரத்து அம்மனாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறாள். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் கன்னி சாமிகள் சபரிமலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறாரகள். இதனால் மகிஷியின் காத்திருப்பும் நீண்டுகொண்டே இருக்கிறது.
மகிஷி மீது, ஐயப்பன் கொண்ட இரக்கத்தினால், அவள் சபரிமலைக்கு அருகில் கோவில் கொண்டு ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள காத்திருப்பதாலும், அதுவரையில் எந்த இளம்பெண்களையும் பார்க்க விரும்பவில்லை எனவும் கூறியதாக கூறப்படுகிறது. மேலேயும், அரக்கியாக இருந்தாலும் ஒரு பெண்ணை வதம் செய்து விட்டு ஐயப்பன் அமர்ந்திருப்பதாலும், சபரிமலைக்கு இளம் வயதில் இருக்கும் பெண்கள் செல்ல கூடாது என்று கூறப்படுகிறது.Why Women Are Not Allowed in Sabarimala Scientific Reason in Tamil:
சபரிமலையில் காந்தசக்தி அதிகமாக இருப்பதால் அவற்றின் கதிர்வீச்சால் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படும் குறிப்பாக கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்பதால், பெண்கள் சபரிமலைக்கு வர கூடாது என்று கூறப்படுகிறது. சபரிமலைக்கு சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என்று சொல்வதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அக்காலத்தில், சபரிமலைக்கு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சரியான சாலை வசதி, பாதைகள் என்று எதுவும் கிடையாது. கரடு முரடான பாதையில், காட்டு வழிப்பாதையில், கொடிய மிருகங்கள் வாழும் பகுதிகள் வழியாக தான் செல்ல வேண்டும். புலி, கரடி, சிறுத்தை, யானை போன்ற மிருகங்கள் அதிகம் நடமாடும். அப்படி இருக்கும் நிலையில் பெண்கள் சபரிமலைக்கு செல்வது என்பது கடினமாக இருக்கும். குறிப்பாக, புலிகளுக்கு ஆண்கள் வாசத்தை விட பெண்களின் வாசத்தை எளிதாக உணரும் ஆற்றல் அதிகம். அதானல், தான் பெண்கள் சபரிமலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் -> | Thinking |