புரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது ? | Why Not to Eat Non Veg in Purattasi in Tamil
பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் பொதுவாக பலர் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் புரட்டாசி மாதம் உண்மையாக அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? சரி வாங்க உண்மையான காரணம் எதுவென்று தெரிந்து கொள்வோம்.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் கோவில்களிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதும். அசைவ கடைகளில் அந்த ஒரு மாதம் முழுவது ஈ ஒட்டி கொண்டு இருப்பார்கள். காரணம் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் அந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமலும், சுத்தமாக இருப்பார்கள் மற்றும் விரதம் மேற்கொள்வார்கள்.
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம் | Reason for Non Veg in Purattasi Month in Tamil:
அறிவியல் காரணம்:
- புரட்டாசி மாதம் மட்டும், காலையில் வெயிலின் சூட்டுக்கு உருகி விடுவோம். மாலை மழைக்கும் குளிருக்கும் உறைந்து விடுவோம். அப்படி வெயிலும் வெளுத்து வாங்கும். மழையும் சளைத்தது அல்ல என்று போட்டி போடும். இடையில் திண்டாடுவது ஜீவராசிகள் நாம் தான். இந்த புரட்டாசி மாதத்தில் தட்பவெப்ப நிலை அவ்வாறுதான் இருக்கும். எனவே அந்த மாதத்தில் நோய்கள் கூட நம்மை எளிதாக தாக்கும். மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தான். மேலும் சூரியனின் தன்மை சற்று மங்கியே இருக்கும். இது போன்ற காலத்தில் அசைவம் சாப்பிட்டால் செரிமான கோளாறு, நோய் தொற்று ஆகியவை ஏற்படும்.
ஆன்மீக காரணம்:
புரட்டாசி மாதத்தில், புதன் ஆளக்கூடிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். புதனின் நட்பு கிரகம் சனிபகவான். புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் என்பதாலும், புதன் பெருமாளுக்கு உரிய கிரகமாக கருதப்படுகிறது. புதன் ஒரு சைவ பிரியர். அதனால், அவர் ஆளக்கூடிய கன்னி ராசிக்கான மாதம் புரட்டாசியில் அசைவ உணவுகளை உட்கொள்ளுதல் கூடாது என்று கூறப்படுகிறது.
நம் முன்னோர்களின் அறிவு:
- எதை எப்படி சொன்னால் நமக்கு உரைக்கும் என்பது நம் முன்னோர்களுக்கு தெரியும்.
- அறிவியல் என்று சொன்னால் யாரும் செவி வரைக்கும் கூட எடுத்து கொள்ள மாட்டோம்.
- அய்யோ சாமி கண்ண குத்தும்னு சொன்னால்தான் பலரும் ஏற்பர். இன்றுவரை அனைவரும் அப்படி தான் உள்ளார்கள், பெருமாள் என்ற பெயரில் அதை கடைபிடித்து கொண்டு.
துளசி தீர்த்தம் குடிப்பதன் காரணம்:
- இம்மாதத்தில் ஏற்ப்படும் உடல்நல பிரச்சனைகளை பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி தீர்த்தம் சரி செய்யும்.
- துளசி தீர்த்தம் குடிப்பதற்கு காரணம், நோய் பரவி எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அந்நேரத்தில் இந்த தீர்த்தத்தை குடித்தால் நோய் தொற்று வராமல் நம் உடலை பாதுகாத்து கொள்ள முடியும்.
- இவையேதான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம் ஆகும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் -> | Thinking |