ஏன் காரின் முன்பக்க கண்ணாடி மட்டும் சாய்வாக உள்ளன தெரியுமா..?

Advertisement

வாகனங்களில் கண்ணாடி

கண்ணடி என்பது வீட்டிலும் சரி வீட்டிற்கு வெளியிலும் சரி இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதுபோல கண்ணாடி என்பது ஒன்றாக இருந்தாலும் கூட அதனை நாம் பயன்படுத்தும் விதம் என்பது பல்வேறு முறையில் இருக்கிறது. ஏனென்றால் கண்ணாடி ஆனது வீட்டில் முகம் பார்ப்பதற்கும் வெளியில் செல்வதற்கு நாம் பயன்படுத்தும் வாகனங்களிலும் அமைந்துள்ளது. நம்மை பொறுத்தவரை கண்ணாடி மற்றும் அது எதற்கு பயன்படுத்த படுகிறது என்ற விவரங்கள் மட்டும் தான் தெரியும். ஆனால் கண்ணாடியை பொறுத்தவரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம்மில் பலபேருக்கு இது எல்லாம் தெரிவது இல்லை. அந்த வகையில் நீங்கள் ஒன்று யோசித்தது உண்டா..! அது என்னவென்றால் கார் கண்ணாடி முன்பக்கம் சாய்வாகவும் மற்றும் பஸ் கண்ணாடி முன்பக்கம் செங்குத்தாகவும் இருக்கும். எதனால் இப்படி வெவ்வேறு முறையில் அமைந்துள்ளது என்று தெரியுமா..? எனவே எதனால் இப்படி அமைந்து இருக்கிறது என்று இன்றைய Thinking பதிவில் தெரிந்துக்கொண்டு தெரியாத நபர்களுக்கு தெரியப்படுத்தலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ஏன் காரின் முன்பக்க கண்ணாடி சாய்வாக முன்பக்க உள்ளன:

பொதுவாக நமக்கு கார் மற்றும் பஸ் இரண்டிற்கும் வேறுபாடு தெரிந்து இருக்கும். அதிலும் குறிப்பாக பார்த்தால் பஸில் தோராயமாக 50 முதல் 70 நபர் வரை செல்லலாம். அதுவே காரில் 5 முதல் 9 நபர்கள் வரை மட்டுமே செல்ல முடியும்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கார் மற்றும் பஸ் இந்த இரண்டின் எடையும் அதற்கு ஏற்றவாறு தான் அமைந்துள்ளது. என்ன தான் இதனுடைய வேறுபாடுகள் நமக்கு தெரிந்து இருந்தாலும் கூட இதில் நம்மை சிந்திக்க வைக்கக் கூடிய ஒன்று இருக்கிறது.

அது என்னவென்றால் காரின் முன்பக்க கண்ணாடி சாய்வாகவும் மற்றும் பஸின் முன்பக்க கண்ணாடி செங்குத்தாகவும் அமைந்து இருக்கும். ஆனால் இதனை நாம் தினமும் பார்த்து இருப்போம். அப்படி இருந்தாலும் கூட அதற்கான பதில் தெரியாமல் இருக்கும். ஏன் அப்படி வேறுபாட்டுடன் உள்ளது என்றால்…

 கார் ஆனது ரோட்டில் செல்லும் போது காற்றின் அழுத்தத்தினை உந்தி கொண்டு தான் அதிவேகத்தில் செல்லும். ஆகையால் காரின் முன்பக்க கண்ணாடி சாய்வாக இருந்தால் தான் காற்றின் அழுத்தம் அதன் மீது பட்டாலும் கார் வேகமாக செல்லும். அதுவே சாய்வாக இல்லாமல் செங்குத்தாக இருந்தால் காற்றின் அழுத்தம் காரின் மீது படும் போது அத்தகைய அழுத்தத்தினை காரினால் தாங்கி கொள்ள முடியாது, வேகமாக செல்லவும் முடியாது மற்றும் எரிபொருளின் அளவும் அதிகமாக இருக்கும்.  

பஸ் ஆனது உயரமாக இருப்பதால் அதனுடைய கண்ணாடி செங்குத்தாக உள்ளது. இப்படி செங்குத்தாக இருப்பதால் காற்றின் அழுத்தத்தை பஸ் ஆனது தாங்கி கொள்ளும். அதுமட்டும் இல்லாமல் பஸ் ஓட்டுனருக்கும் இவ்வாறு கண்ணாடி இருந்தால் தான் பேருந்தினை ஓடுவதற்கும் ஏற்றதாக இருக்கும். மேலும் பேருந்தின் மற்ற வசதியினையும் கருதி முன்பக்க கண்ணாடி செங்குத்தாக அமைப்பட்டுள்ளது. 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  ரயிலின் மேல் எதற்கு இந்த வட்ட வளையம் பொறுத்தப்பட்டுள்ளது தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement