Why Some Flowers are Fragrant but Some Flowers are not in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் சுவாரசியமாக மற்றும் பயனுள்ளதாகவும் அமையும். ஆம் நண்பர்களே பொதுவாக நாம் அனைவரின் மனதிலேயும் பல கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருக்கும். அப்படி ஏற்படும் அனைத்து கேள்விகளுக்கும் நமக்கு விடை கிடைத்து விட்டதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் நம்மில் பலரின் மனதிலேயும் ஏற்படும் கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொண்டு வருகின்றோம்.
அந்த வரிசையில் இன்றைய பதிவில் நம்மில் பலரின் மனதிலேயும் எழும் ஒரு பொதுவான கேள்வியான ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை என்பதற்கான பதிலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை..?
பொதுவாக மலர்கள் என்றாலே நாம் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சில மலர்களில் இருந்து வரும் அவற்றின் வாசனை என்பது பலரின் மனதிற்கு மிக நெருக்கமான வாசனையாக இருக்கும்.
பொதுவாக நீங்கள் ஏதாவது ஒரு வாசனையுள்ள மலரை எடுத்து அதனை நறுமணத்தை முகர்ந்து ரசிக்கும் பொழுது என்றாவது ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை..? என்று சிந்தனை செய்து பார்த்துள்ளீர்களா..?
சிந்தனை செய்தவர்களுக்கெல்லாம் அதற்கான பதில் கிடைக்கும். பொதுவாக மலர்களில் வரும் வாசனை என்பது பல்வேறு ஆவியாகும் கரிம சேர்மங்களால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மேலும் மலர்கள் தங்களின் மகரந்த சேர்க்கைகாக மட்டுமே அதிக நறுமணத்தை வீசுகின்றன.
அதாவது ஒரு சில மலர்கள் தங்களின் மகரந்த சேர்க்கைக்காக பூச்சிகள் மற்றும் பறவைகளை நம்பியுள்ளன. அதனால் தான் அவை அதிக நறுமணத்தை வீசுகின்றன. இவை வெளியிடும் வாசனையால் இவற்றை நோக்கி பூச்சிகள் மற்றும் பறவைகளை ஈர்க்க முடிகின்றது. ஆனால் ஒரு சில மலர்கள் தங்களின் மகரந்த சேர்க்கையை காற்று அல்லது நீர் மூலம் செய்து கொள்கின்றன. அதனால் அவை நறுமணத்தை வீசுவதில்லை .
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |