Train Station PH Name Reason in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் ரயிலில் பயணம் செய்தது உண்டா..? நான் கேட்கும் கேள்விக்கு அனைவரிடமும் பதில் இருக்கும். காரணம் அனைவருமே ரயிலில் பயணம் செய்திருப்பீர்கள். ரயில் பயணம் என்பது சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தையே பலரும் விரும்புகிறார்கள். காரணம் பஸ்ஸில் இருக்கும் வசதியை விட ரயிலில் பல வசதிகள் இருக்கிறது. அதனால் தான் நீண்ட தூர பயணங்களுக்கு பலரும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்யும் போது சில ஊர் போர்டுகளில் ஊரின் பெயருடன் PH என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இப்படி PH என்று எழுத காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ரயில் நிலையங்களில் PH என்று எழுத காரணம் என்ன..?
நாம் ரயிலில் பயணம் செய்தால் கண்டிப்பாக இரயில் நிலையத்தில் இறங்கி தான் ஆக வேண்டும். அப்படி இரயில் நிலையத்தில் இறங்கும் போதோ அல்லது இரயில் நிலையங்களை கடந்து செல்லும் போதோ, அது எந்த ஊர் என்ற போர்டு வைக்கப்பட்டிருக்கும்.
அப்படி இருக்கும் சில ஊர் போர்டுகளில் ஊரின் பெயருடன் PH என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
PH என்பது Passenger Halt என்பதன் விரிவாக்கம் ஆகும். இங்கு பயணிகளின் ரயில்கள் இந்த நிலையத்தில் நிற்கும் என்பது தான் இதற்கு அர்த்தம் ஆகும்.
ரயிலில் மட்டும் ஏன் 2 டிரைவர்கள் இருக்கிறார்கள்.. காரணம் என்ன தெரியுமா |
அதாவது PH என்று எழுதப்பட்டிருக்கும் ரயில் நிலையங்கள் பொதுவாக கிராமப் பகுதிகளில் இருக்கும் மிகச் சிறிய நிலையங்கள் ஆகும். இங்கு பயணிகளின் ரயில்கள் மட்டுமே நிற்கும். அதுபோல மற்ற ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் இந்த ரயில் நிலையங்களில் இருக்காது.
இங்கு ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது வேறு எந்த அதிகாரியும் ரயில்வே துறையால் நியமிக்கப்படுவதில்லை. PH என எழுதப்பட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் 2 நிமிடம் மட்டுமே நிறுத்தப்படும். இந்த நிலையங்களில் டிக்கெட் விநியோகிக்க ரயில்வே ஊழியர்கள் கூட இருக்க மாட்டார். டிக்கெட்டுகளை வாங்க மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா |
இது போன்ற PH ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்துவதற்கு சிக்னல் கூட கிடையாது. இந்த ரயில் நிலையங்களால் பெரிய அளவில் வருமானம் இருக்காது. இருந்தாலும் மக்களின் நலன் கருதி, இது போன்ற ரயில் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற நிலையங்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் சின்ன சின்ன ரயில் நிலையங்களை ரயில்வே அமைச்சகம் பராமரித்து வருகிறது.
ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா? |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |