Why The Reason For The Name Idli
நாம் தினமும் எத்தனையோ வகையான சாப்பிட்டு இருப்போம். அத்தகைய உணவுகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உணவுகள் பிடித்து இருக்கும். அதிலும் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி, உப்மா மற்றும் அடை போன்றவற்றை சாப்பிட்டு இருப்போம். என்ன தான் இத்தனை உணவுகள் சாப்பிட்டாலும் கூட இட்லி ஆனது அனைத்து சுப நிகழ்ச்சி மற்றும் துன்ப நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு உணவாக உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கும் உணவு என்றால் அது இட்லி தான். இப்படி நாம் எதற்கு எடுத்தாலும் இட்லி இட்லி கூறுகிறோம். உண்மையில் இந்த இட்லி நம்முடைய நாட்டின் உணவு தானா..! எதனால் இதற்கு இட்லி என்று பெயர் வந்தது போன்ற கேள்விகள் தோன்றி இருக்கும். உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறும் வகையில் இந்த பதிவில் இட்லி என்று பெயர் வந்ததிற்கான காரணம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா.. |
இட்லி என்று பெயர் வருவதற்கான காரணம்:
பொதுவாக நாம் காலையில் சாப்பிடும் உணவானது மிகவும் கடினமான சாப்பாடாக இல்லாமல் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சாப்பாட்டினை தான் சாப்பிட வேண்டும். அது தான் உடல் நலத்திற்கும் நன்மையும் கூட.
அந்த வகையில்ன் வீட்டில் இருக்கும் நபர் முதல் வேலைக்கு செல்லும் நபர் என அனைவரும் காலையில் இட்லினை தான் சாப்பிடுகின்றனர். ஏனென்றால் இது சாப்பிடுவதற்கு மற்றும் வேக வைப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது.
இப்படிப்பட்ட இட்லி எந்த நாட்டில் இருந்து தோன்றியது என்றால் அது இந்தோனீசியா தான். இந்தோனீசியாவில் பெரும்பாலும் நீரினால் வேக வைத்த உணவினை சாப்பிடுகிறார்கள். மேலும் இந்தோனீசியாவில் இத்தகைய இட்லியினை கெட்லி என்ற சொல்லில் அழைத்தார்கள்.
இதனை போலவே சீனாவிலும் நீரினால் வேக வைத்த உணவினை தான் இந்த நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் 8 முதல் 12-ஆம் நூற்றாண்டின் நடுவில் இந்தோனீசியாவில் வேலை புரிந்த நபர் இந்தியாவிற்கு வந்த போது அவர் தான் இந்த இட்லினை இங்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதன் பின்பு இந்தியாவில் இட்லி என்ற உணவு முறை வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது இந்தோனீசியாவில் கெட்லி என்று அழைக்கப்பட்டாலும் கூட இந்தியாவில் அரிசியுடன் சேர்த்து அரைக்கப்படுவதாலும் மற்றும் நீராவினால் வேக வைப்பதனாலும் இட்லி என்று பெயர் வந்தது.
மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா.. |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |