பாத்திரங்களை கழுவுவதற்கு டிப்ஸ்
பொதுவாக பாத்திரங்களை கழுவுவது என்றாலே பெண்களுக்கு கஷ்டமாக இருக்கும். அதுவும் அடி பிடித்த பாத்திரங்களை கழுவுவது ஈஸியான விஷயம் அல்ல. அதிக காசு கொடுத்து லீகுய்டுகளை வாங்கி வைத்து பயன்படுத்தினாலும் இந்த அடி பிடித்த பாத்திரத்தை கழுவினாலும் அதிலுள்ள கறைகள் நீங்கி இருக்காது. அதனால் தான் இந்த பதிவில் ஈஸியான முறையில் அடி பிடித்த பாத்திரத்தை கழுவுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அடி பிடித்த பாத்திரங்களை கிளீன் செய்ய தேவையான பொருட்கள்:
- சோப்பு- 1
- உப்பு- 2 தேக்கரண்டி
- தண்ணீர்- 1 தேக்கரண்டி
- கோக்- 1
லீகுய்டு செய்முறை:
1 டம்ளர் காட் வாட்டர் போதும் கருத்த கேஸ் பர்னர் பளிச்சென்று மாற..!
முதலில் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப் அல்லது துணி துவைக்க பயன்படுத்தும் சோப் ஏதாவதிலிருந்து ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும். இதனை கேரட் சீவுவோம் அல்லவா அதில் வைத்து சிறியதாக சீவி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சீவி வைத்த சோப்பை சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு கோக் முழுவதையும் சேர்க்க வேண்டும். பின் இதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். இதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
15 நிமிடம் கொதித்த பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
இவை நன்றாக கலர் மாறி ஓரளவிற்கு சுண்டி அப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் இவை ஆறியதும் பிளாஸ்டிக் டப்பா சின்னதாக 5 எடுத்து அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனை பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்ய வேண்டும். ஒரு 2 மணி நேரம் கழித்து பார்த்தால் சோப்பு போல் கட்டியாக வந்திருக்கும்.
இதனை எடுத்து பாத்திரம் துலக்கும் டப்பாவில் சேர்த்து வைக்க வேண்டும். நீங்கள் பாத்திரம் துலக்கும் கம்பி நார் அல்லது ஸ்கிரப்பர் பயன்படுத்தி பாத்திரங்களை துலக்க வேண்டும்.
இந்த சோப்பை பயன்படுத்தி அடி பிடித்த பாத்திரங்களை துலக்கினால் பளிச்சென்று மாறிவிடும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க நீங்களே அசந்து போவீங்க..
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |