அறுவை சிகிச்சை புண் ஆற என்ன செய்ய வேண்டும்..?

Advertisement

அறுவை சிகிச்சை புண் ஆற

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் பயனுள்ள ஒரு தவறுகளை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அது என்னவென்றால் அறுவை சிகிச்சை செய்த பிறகு புண் ஆறாமல் நீண்ட நாட்கள் வரை கஷ்டப்படுத்தும். புண் ஆறாமல் இருக்க நாமே காரணமாக இருக்கிறோம். ஆகையால் நீங்கள் என்ன செய்தால் விரைவில் அறுவை சிகிச்சை புண் குணமாக என்ன செய்யவேண்டும் என்று இந்த பதிவின் படித்தறிவோம்.

அறுவை சிகிச்சை புண் குணமாக:

அமெரிக்காவில் வட‌கிழ‌க்கு வே‌ல்‌ஸ் அற‌க்க‌ட்டளை‌  18 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேனை பற்றிய ஆய்வில் தேனில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

அந்த ஆய்வின் முடிவில் அறுவை சிகிச்சை செய்வதர்க்கு பின் ஒரு நோயாளிகளுக்கு விரைவில் குணமாக மருத்துவர்கள் தேனை பரிந்துரை செய்யலாம்.

சிகிச்சை முடிந்தபிறகு நோயாளிகளுக்கு தேனை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லலாம். அதேபோல் வீடுகளில் தனியாக சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டில் ஓய்வு எடுப்பவர்கள் தனியாக தேனை பயன்படுத்த கூடாது.

தேனில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதிகளவு சர்க்கரை, குளுகோனிக் அமிலம் போன்ற சேர்மங்கள் உள்ளது. ஆகவே தென் காயங்களில் பா‌‌க்டீ‌ரியா வளர்வதை தடுக்கிறது.

அதேபோல் தீ காயம் பட்ட இடங்களிலும் இருக்கும் நு‌ண்ணு‌யி‌ரிக‌‌ளி‌ன் வருவதை தடுக்கிறது. அதனால் விரைவில் குணமாக வழிசெய்கிறது.

இதனை அதிகளவு யாரும் நம்பவும் மாட்டீர்கள் காரணம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்பவர்கள். தேனை உட்கொண்டால் விரைவில் புண் ஆறாது என்று நினைத்து அதனை சாப்பிட மருத்துவிடுவார்கள்.

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன? 

புரோட்டின் நிறைந்த உணவுகள்:

புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் காயங்களை மிக விரைவில் ஆற்றிவிடும். புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகள் என்று கேட்டால் அசைவ உணவுகளில் உள்ளது. உதாரணமாக முட்டை, சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளில் அனைத்திலும் அதிகளவு புரோட்டின் உள்ளது.

அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் சைவ உணவுகளை உட்கொள்ளலாம். காய்கறிகளை சாப்பிடலாம். அதேபோல் தினசரி உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் அதாவது பால், தயிர், மோர், போன்றவற்றை உட்கொள்ளலாம்.

அதேபோல் சுண்டல் வகைகளை சாப்பிடலாம், கொண்டக்கடலை, பாசிப்பயிறு போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement