வீட்டில் ஈக்களின் தொல்லை நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்கள்..!

Advertisement

வீட்டில் ஈ தொல்லை நீங்க

நம்முடைய வீட்டில் நாம் அதிகமாக இருக்கும் நேரத்தினை விட ஈக்கள், எறும்பு, பூச்சி மற்றும் கொசுக்கள் தான் அதிகமாக இருக்கிறது. இவை எல்லாம் எப்படி வருகிறது என்ற இடத்தினை நாம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் குறிப்பாக ஈக்கள் வீட்டில் ஏதாவது ஒரு சாப்பாடோ அல்லது மற்ற ஏதேனும் திறந்து இருந்தால் போது உடனே அங்கு தான் ஈக்கள் கூட்டமாக வந்து நிற்கும். அதனால் இன்றைய பதிவில் வீட்டில் அட்டகாசம் செய்யும் ஈக்களின் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

E Thollai Neenga Tamil Tips:

  • வினிகர்- 1 ஸ்பூன் 
  • பாத்திரம் கழுவும் ஜெல்- 1/2 ஸ்பூன் 

வினிகர்

முதலில் ஒரு பவுலில் எடுத்து வைத்துள்ள இரண்டு பொருளையும் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து முடித்த பிறகு இதை ஈக்கள் அதிகமாக வரும் இடங்களில் ஸ்ப்ரே செய்தால் போது ஈக்களின் தொல்லை என்பது இருக்காது.

ஈ தொல்லை நீங்க:

  1. இஞ்சு பொடி- 2 ஸ்பூன் 
  2. தண்ணீர்- 4 கப் அளவிற்கு 

 ஈ தொல்லை நீங்க

இஞ்சி என்பது நமது உடலுக்கு செரிமானத்தை மேம்பட செய்தாலும் கூட இது ஈக்களுக்கு ஆகாத ஒன்றாக இருக்கிறது.

ஆகையால் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் இஞ்சு பொடி மற்றும் 4 கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு கலந்து வைத்துள்ள தண்ணீரை ஈக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் தெளித்தால் போது ஈக்கள் மீண்டும் வரவே வராது.

வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட வெங்காயம் மட்டும் போதும் 

ஈ விரட்டுவது எப்படி:

  • துளசி இலை- 1 கைப்பிடி அளவு 

 ஈ விரட்டுவது எப்படி

துளசியில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருந்தாலே கூட இதனின் வாசனை என்பது ஈக்களுக்கு முற்றிலும் ஆகாத ஒன்று. அதனால் 1 கைப்பிடி அளவு துளசி இலையினை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

பின்பு கொதித்த தண்ணீரை ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள். இப்போது இந்த துளசி தண்ணீரை ஈக்கள் வரும் அனைத்து இடங்களிலும் தெளித்து விடுங்கள் இனி ஈ என்பதே உங்கள் கண்ணில் படவே படாது.

வீட்டில் ஒரே பல்லி தொல்லையா அப்போ இதை மட்டும் செய்யுங்க ஒரு பல்லி கூட வராது

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement