உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டியவை
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த வார்த்தை பார்த்தவனுடன் பதிவிலுருந்து வெளியே சென்று விடாதீர்கள். இதை படித்ததும் நினைப்பீர்கள் எத்தனையோ ட்ரை செய்து விட்டேன் ஆனால் ஒரு Improvement இல்லை என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த பதிவில் கூறியுள்ளதை மட்டும் செய்து பாருங்கள். நீங்கள் ஆச்சிரியப்படும் அளவிற்கு உங்களின் உடல் எடை அதிகரிக்கும். இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
தேங்காய் பால்:
இதையும் படியுங்கள் ⇒ ஒரே மாதத்தில் உடல் எடை அதிகரிக்க இதை சாப்பிடுங்க..
தேங்காய் பாலை இரவு தூங்குவதற்கு முன் 1 டம்ளர் குடியுங்கள். வெறும் தேங்காய் பால் குடிக்காமல் அதனோடு சிறிதளவு வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
செவ்வாழை பழம்:
உடல் எடையை அதிகரிப்பதற்கு செவ்வாழை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செவ்வாழை பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிட முடியாது என்கிறவர்கள் காலை உணவு சாப்பிட்ட பிறகு செவ்வாழை பழத்தை எடுத்து கொள்ளலாம். செவ்வாழை பழம் சாப்பிட்ட பிறகு ஒரு 1/2 மணி நேரத்திற்கு எந்த உணவும் எடுத்து கொள்ள கூடாது.
எள் உருண்டை பயன்கள்:
எள்ளில் புரோட்டீன், ஜிங்க் சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும். எள்ளை ஒரு கப் எடுத்து வறுத்து கொள்ளுங்கள். வறுத்த எள் மற்றும் வெல்லம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த பொடியை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள். இந்த எள் உருண்டையை தினமும் 2 உருண்டைகள் சாப்பிடுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளை தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிடுங்கள் கண்டிப்பாக உடல் அதிகரித்திருப்பதை நீங்களே காணலாம்.
இதையும் படியுங்கள் ⇒ ஆரோக்கியமாக அழகாக உடல் எடை அதிகரிக்க என்ன செய்யலாம்?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |