எலிகளிடம் இருந்து உங்களுடைய வாகனங்களை பாதுகாப்பதற்கு இந்த ஒரு டிப்ஸ் தெரிந்தால் மட்டுமே போதும்

Advertisement

எலி தொல்லை நீங்க

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் எல்லோருக்கும் ஒரு பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம், அதாவது உங்களுடைய வீடுகளில் இருக்கும் எலிகளை விரட்டி அடிக்க என்ன செய்வது என்றுதான் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.  பொதுவாகவே எல்லோருடைய வீட்டிலும் எலிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும்.

இவை வீட்டை மட்டும் நாசம் செய்வது மட்டுமின்றி, வீட்டிற்கு வெளியில் இருக்கும் கார், பைக் போன்ற வாகனங்களையும் நாசம் செய்கின்றன,  இந்த எலிகள் வாகனங்களில் இருக்கும் ஒயர்களை கடித்து நறுக்குவதால், இதனை நாம் பார்க்காமல் எடுத்து செல்லும் பொழுது பல விபத்துகளுக்கு உள்ளாகின்றோம், எனவே இந்த எலி தொல்லையில் இருந்து உங்களுடைய வாகனத்தை எப்படி பாதுகாப்பது என்றும், அந்த  எலியை எப்படி ஒழிப்பது என்றும் தெரிந்துகொள்வோம்.

வீட்டில் உள்ள எலியை விரட்டும் வழிகள்..!

எலியை விரட்டுவது எப்படி.?

 veetil eli thollai neenga

எலி தொல்லையில் இருந்து உங்களுடைய வாகனங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு என்ன  செய்வது என்று தெரியாமல் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள். எனவே இந்த எலிகளை விரட்டுவதற்காக கடைகளில் சென்று மருந்து வாங்க வேண்டும்  என்று அவசியமில்லை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, இந்த எலிகளை  விரட்டலாம். மேலும் அவற்றை எப்படி செய்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

எலியை விரட்ட தேவையான பொருட்கள்:

  1. ஒரு சிறிய கிண்ணம்
  2. தேங்காய்-1
  3. கோதுமை மாவு- 1 கப் 
  4. கம்பி -1 
  5. பாராசிட்டமால் 500 mg – 3
  6. உப்பு- சிறிதளவு 
  7. தண்ணீர் -தேவையான அளவு 

செய்முறை: 

ஸ்டேப்:1

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கிணத்தில் கோதுமை மாவை சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்:2

கோதுமை மாவை சேர்த்த பிறகு, ஒரு முழு தேங்காயின் தண்ணீரை அந்த கோதுமை மாவு இருக்கும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக, அந்த தேங்காயில் ஒரு சிறிய துண்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்:3

அடுத்ததாக அந்த சிறிய துண்டு தேங்காவை ஒரு கம்பியில்  சொருக வேண்டும். சொருகிய பிறகு அதை நெருப்பில் ஒரு 2 நிமிடம் சூடுபடுத்த வேண்டும். சூடுபடுத்திய தேங்காவை கம்பியில் இருந்து எடுத்து, அதை  மிக்ஸியில் அரைத்து, அந்த கோதுமைமாவு, தேங்காய் தண்ணீர் இருக்கும் கிண்ணத்தில் சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்:4

அடுத்ததாக பாராசிட்டமால் 500 mg  மாத்திரையில் ஒரு மூன்று மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு கவர் மேல் வைத்து நன்றாக நுணுக்க வேண்டும். நுணுக்கிய பிறகு நாம் எடுத்து வைத்த  கலவை பாத்திரத்தில் நுனிக்கிய பாராசிட்டமால் மாத்திரைகளை  சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்:5

நுணுக்கிய மாத்திரையை அந்த பாத்திரத்தில் சேர்த்த பிறகு, அதில்  கொஞ்சம் உப்பு சேர்த்து, தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதாவது சப்பாத்திக்கு மாவு பதம் வரும் வரை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்து வைத்த மாவை சின்ன சின்ன உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும். 

பயன்படுத்தும் முறை:

நாம் உருட்டி வைத்த அந்த உருண்டைகளை எடுத்துக் கொண்டு, உங்கள் வீட்டில் வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை சுற்றி வைக்க வேண்டும். அதாவது வாகன டயர்கள் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும், ஏனென்றால் முதலில் எலிகள் டயர் இருக்கும் பகுதியில் தான் ஏறுமாம்.

இந்த உருண்டைகளை எலிகள் சாப்பிட பிறகு, அதற்கு மயக்கம் ஏற்பட்டு, அடுத்து அதனுடைய கிட்னி பாதித்து இறந்து விடும். எனவே இனிமேல் எலிகள் வரவே வராது.

கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement