மழை காலத்தில் காய்கறிகள் கெட்டு போகாமல் இருக்க இதை செய்யுங்க..!

Advertisement

காய்கறி கெடாமல் இருக்க

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் காய்கறிகள் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். பொதுவாக காய்கறிகள் நீண்ட நாட்கள் பிரஷாக இருக்காது. அதிலும் மழை காலத்தில் சொல்லவே வேண்டாம். காய்கறிகள் சீக்கிரமாக வீணாகிடும். இதற்கு என்ன தான் செய்வது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். இப்படி யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க காய்கறிகள் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

கத்திரிக்காய் கெடாமல் இருக்க:

கத்திரிக்காயில் உள்ள காம்புகளை நீக்கி ஒரு சில்வர் பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

வெண்டைக்காய் கெடாமல் இருக்க:

வெண்டைக்காயின் இரண்டு பகுதியிலும் உள்ள முனைகளை நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வையுங்கள்.

முருங்கைக்காய் கெடாமல் இருக்க:

முருங்கைக்காயை முழுதாக அப்படியே வைக்காமல் அதை சின்ன சின்னதாக கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வையுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வாழைப்பழம் 1 வாரம் ஆனாலும் வீணாகாமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

பீட்ரூட் கெடாமல் இருக்க:

பீட்ரூட்டை இரண்டு பகுதிகளிலும் உள்ள முனைகளை கட் பண்ணி பாத்திரத்தில் வைத்து மூடி வையுங்கள்.

கேரட் கெடாமல் இருக்க:

கேரட்டில் இரண்டு பகுதிகளிலும் உள்ள முனைகளை நறுக்கி ஒரு பாத்திரத்தில் வையுங்கள். நீங்கள் கேரட்டை நறுக்கும் போது அழுகி இருந்தால் எது வரைக்கும் அழுகி இருக்கிறதோ அது வரைக்கும் நறுக்கி கொள்ளுங்கள்.

பாகற்காய் கெடாமல் இருக்க:

பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு வைத்தால் பாகற்காய் கெடாமல் இருக்கும். அதுவே விதைகளோடு வைத்தால் பாகற்காய் விரைவாக பழுத்து விடும் .

பீன்ஸ் கெடாமல் இருக்க:

பீன்ஸ் இரு முனைகளையும் நறுக்கும் போது அதிலிருந்து நார் வரும் அல்லவா.! அந்த நாரை எடுத்து விட்டு பாத்திரத்தில் வையுங்கள்.

தக்காளி கெடாமல் இருக்க:

தக்காளியை நன்கு கழுவிட்டு அதன் பிறகு பாத்திரத்தில் வைத்தால் 10 நாட்கள் ஆனாலும் தக்காளி கெட்டு போகாது.

வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேங்காய் கெடாமல் இருக்க:

வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு தேங்காய் போன்றவற்றை காற்றோட்டமான பகுதியில் வைக்க வேண்டும். பூண்டை முழு பூண்டாக வைக்காமல் ஒவ்வொரு பல்லாக எடுத்து வைக்க வேண்டும். 

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா கெடாமல் இருக்க:

கறிவேப்பிலை மற்றும் புதினாவில்  இலைகளை மட்டும் எடுத்து பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். கொத்தமல்லியில் வேர்களை நீக்கி விட்டு வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டில் பொருட்கள் வீணாகாமல் இருக்க இதை தெரிந்துக்கொண்டால் போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement