பெண்களே வாய்மேல் கருமையாக இருக்கிறதா அதன் காரணம் என்ன தெரியுமா..? அதனை நீக்குவதற்கு சூப்பரான டிப்ஸ்

வாய் மேல் கருமை நீங்க

ஹலோ மக்களே அனைவருக்கும் அன்பு வணக்கம்..! அனைவரும் சிறப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..! இதுபோல் நாங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர்பார்ப்பு வைத்துக்கொண்டு முகம் தெரியாமல் உங்களிடம் பேசி வருவதில் பெரும் மகிழ்ச்சி இருக்கிறது எங்களுக்கு. வாங்க இன்று அதிகளவு பெண்களுக்கு பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. முகத்தில் இதுபோல் வருவதற்கு காரணம் என்ன. அதனை நீக்குவதற்கு சூப்பரான டிப்ஸ்களுடன் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். வாங்க அதனை பற்றி இப்போது தெளிவாக படித்தறிவோம்..!

வாயை சுற்றி கருமை வர காரணம்:

வாயை சுற்றி கருமை வருவது என்பது இயற்கைதான் ஆதலால் யாரும் பயம் கொள்ள வேண்டாம். வாயை சுற்றி கருமைப்படலம் உருவாகுவது ஹைப்பர்- பிக்மெண்டேஷன்., ஹார்மோன் சமநிலையின்மை காரணங்களால் உருவாக்கலாம். இது கண்டு யாரும் பயந்து செயற்கை மருத்துகளை பயன்படுத்தி முகத்தை வீணாக்கிக்கொள்ள வேண்டாம். இதனை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை முறையில் நீக்கி விடலாம்.

மூக்கின் மீது கருமை நீங்க ⇒ மூக்கில் கருமை மறைய

வாயை சுற்றி கருமை நீங்க:

டிப்ஸ் -1

வீட்டில் எலுமிச்சை பழம் இருந்தால் அதனை பாதியாக வெட்டிக்கொண்டு அதில் சீனி அல்லது சர்க்கரை சேர்த்து வாயை சுற்றி மிருதுவாக தேய்க்கவும். இது போல் 5 நிமிடம் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி கருமையாக இருக்கும் இடம் வெண்மையாக மாறும்.

டிப்ஸ் -2

தக்காளி சாறு

அனைவரின் வீட்டிலும் தக்காளி இருக்கும் அதில் இருக்கும் சாறுகளை இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு இந்த இரண்டு பொருட்களுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். உதட்டின் மேல் புறம் மற்றும் கீழ் புறம் தடவிக்கொள்ளவும். முகத்தில் அப்ளை செய்த பின் 20 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளாம். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்வதால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

டிப்ஸ் -3

 வாயை சுற்றி கருமை நீங்க

ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் 1 ஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ளவும் இந்த பொருட்கள் இரண்டையும் நன்கு கலந்துகொள்ளவும். தூங்கும் முன் வாயை சுற்றி அப்ளை செய்துகொள்ளவும். லேசாக காய்ந்த பிறகு தூங்கி மறுநாள் காலையில் குளித்து விடலாம். இது உங்களுக்கே தெரியும் எப்படி இதனுடைய பதில் என்று.

டிப்ஸ் -4

 வாயை சுற்றி கருமை நீங்க

வீட்டின் சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவது கேரட் . அதில்  ஜூஸ் செய்து குடிப்பது பழக்கம். அதனை உதட்டை சுற்றி கருமையான இடத்தில் போடுவதால் நல்ல மாற்றம் வரும் காரணம் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி கருமை வராமல் தடுக்கும். முக்கியமாக முகத்தில் தடவிய பின் 20 நிமிடம் ஊறவைக்கவும். அதேபோல் பீட்ருட் ஜூஸ் செய்து முகத்தில் இதேபோல் செய்யலாம்.

டிப்ஸ் -5

 வாயை சுற்றி கருமை நீங்க

உருளைக்கிழங்கு சாறை எடுத்துக்கொள்ளவும். எடுத்துக்கொண்டு பஞ்சு போன்ற துணியால் நனைத்துவிட்டு முகம் முழுவதும் தடவிக்கொள்ளவும். காய்ந்த பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.  இதனை இரவு தூங்கும் போது செய்வதன் மூலம் நல்ல மாற்றம் கிடைக்கும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil