1 கிலோ சாம்பார் பொடி அளவுகள் | Sambar Powder Ingredients for 1kg in Tamil
பெரும்பாலான நபர்களுக்கு சாம்பார் என்றாலே மிகவும் பிடிக்கும். சாம்பார் உணவை மூன்று வேலை கொடுத்தாலும் சளிக்கலாமல் சாப்பிடும் நபர்கள் இருக்கின்றனர். அதோடு சாம்பார் வைப்பது கஷ்டமான வேலையாக இருக்காது. சமையலில் ஈசியாக செய்ய கூடிய உணவுகளில் ஒன்று தான் சாம்பார். இந்த சாம்பாரை வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்தால் ஏனோ தானோ என்று வைப்போம். அதுவே வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டால் சாம்பார் பொடி இல்லாமல் குழம்பு வைக்க மாட்டோம். கடையில் காசு கொடுத்து வாங்குவதை விட வீட்டிலே தயாரித்து வைத்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுவும் இல்லாமல் நிறையவும் இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் 1 kg சாம்பார் பொடி வைப்பதற்கான தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை இந்த பதிவில் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1 கிலோ சாம்பார் பொடி வைப்பதற்கு தேவையான பொருட்கள் | 1kg Sambar Powder Recipe in Tamil:
♠ பருப்பு –200 கிராம்
♠ உளுத்தம் பருப்பு – 200 கிராம்
♠ கொத்தமல்லி விதை –1 கிலோ
♠ மிளகு – 200 கிராம்
♠ சீரகம் – 200 கிராம்
♠ காய்ந்த மிளகாய் – 1/2 கிலோ
♠ வெந்தயம் – 100 கிராம்
♠ கறிவேப்பிலை – 1 கைப்பிடி
♠ பெருங்காயம் தூள் –1/2 தேக்கரண்டி
♠ மஞ்சள் தூள் – 100 கிராம்
♠ கடுகு -200 கிராம்
ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:
♠ Gram Dal – 200 Gram
♠ Urad Dal – 200 Gram
♠ Coriander Seeds – 1 Kg
♠ Black Pepper Seeds – 200 Gram
♠ Cumin Seeds – 200 Gram
♠ Dry Red Chilli – 1/2 Kg
♠ Fenugreek – 100 Gram
♠ Mustard – 100 Gram
♠ Curry Leaves – Required amount
♠ Tumeric Powder – 100 Gram
சாம்பார் பொடி செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளுங்கள். சூடு ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அவ்ளோதாங்க சாம்பார் பொடி ரெடி.!
சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பொடி செய்வது என்று தெரிந்து கொண்டீர்கள். அதே போல் சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
ஹோட்டல் சுவையில் சாம்பார் செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |