10 நாட்களில் உடல் எடை குறைய டிப்ஸ்..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் பற்றித்தான். அப்படி என்ன தகவல் என்றுதானே சிந்திக்கிறீர்கள். அது என்னவென்றால் 10 நாட்களில் உடல் எடை குறைய டிப்ஸ்..!. இன்றைய காலகட்டத்தில் உடை எடை அதிகரிப்பு என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆனால் அப்படி உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலில் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உண்டு.
நீங்களும் இந்த உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகளை கையாண்டிருப்பீர்கள் ஆனால் அவை எதுவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்காது. ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸை மட்டும் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உடல் எடை வேகமாக குறைவதை நீங்களே பார்ப்பீர்கள். இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உடல் எடை குறைய டிப்ஸ்:
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. நாமும் நம்முடைய உடல் எடையை குறைப்பதற்காக பல மருந்துகள் சாப்பிட்டிருப்பீர்கள் ஆனாலும் இந்த உடல் எடை குறைந்திருக்காது. ஆனால் இப்பொழுது கூறப்போகும் ஒரு டிப்ஸை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் போதும் 10 நாட்களில் உங்களுடைய உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே பார்க்கலாம்.
டிப்ஸ் :
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- பாசிப்பயிறு – 150 கிராம்
- வெள்ளரிக்காய் – 3
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- கேரட் -1
- எலுமிச்சை – 1/2 பழம்
- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
- இளஞ்சிவப்பு உப்பு(Pink Salt) – 1 டீஸ்பூன்
சாலட் செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்திருந்த 150 கிராம் பாசிப்பயிரை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதனை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து பிறகு அடுத்தநாள் அதனை ஒரு சிறிய துணியில் கட்டி முளைக்கட்டுங்கள்.
பின்னர் அந்த முளை கட்டிய இந்த பயிரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்துவைத்திருந்த 3 வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் 1 வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து அதனுடன் 1 தக்காளியை அதனுடன் விதைகளை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். மேலும் அதனுடன் 1 கேரட்டை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் மிளகுத்தூள், 1 டீஸ்பூன் இளஞ்சிவப்பு உப்பு (Pink Salt) மற்றும் 1/2 எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
நீங்கள் சிந்திக்கலாம் பாசிப்பயிரை அப்படியே சாப்பிடலாமே ஏன் சாலட்டாக செய்து சாப்பிடவேண்டும் என்று இந்த பாசிப்பயிர் சாலட்டில் சேர்க்கும் பொருட்களில் உடல் எடையை குறைக்க உதவும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் தான் இந்த பாசிப்பயிரை சாலட்டாக செய்து சாப்பிட வேண்டும்.
இந்த பாசிப்பயிரை சாலட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறைவதையும். மேலும் உங்கள் உடல் வலிமை பெறுவதையும் நீங்களே காணலாம்.
இதையும் பாருங்கள் => 7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!
இது போன்று டிப்ஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |