10 பேருக்கு சமைக்க எவ்வளவு தேவைப்படும்
பொதுவாக வீட்டில் உள்ளவர்களு மட்டும் சமைப்பது என்றால் தேவையான பொருட்கள் அதன் அளவுகள் போன்றவற்றில் பிரச்சனை இருக்காது. நமது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைக்கும் போது அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதுவே வீட்டிற்கு உறவினர்கள் வந்துவிட்டால் என்னதான் அதிக பொருட்கள் சேர்த்து சமைத்தாலும் அதன் சுவை நன்றாக இருக்காது. அல்லது அவர்களுக்கான அளவு தெரியாமல் சமையலை சொதப்பிவிடுவோம். இந்த அளவுகள் பிரச்சனை உறவினர்கள் வந்தால் காலை டீயில் தொடங்கி இரவு உணவுவரை சோதனை வரும். இதற்கான தீர்வாக நமது பொதுநலம் தளத்தில் ஒவ்வொரு உணவே தயாரிக்க என்ன என்ன பொருட்கள் எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். இன்றைய பதிவில் பரபரப்பான காலைவேளையில் வெண்பொங்கல் செய்ய என்ன பொருட்கள் எவ்வளவு வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
10 பேருக்கு வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்களின் அளவு பட்டியல்:
பொருட்கள் | அளவு |
பச்சரிசி | 3 கப் |
பாசிப்பருப்பு | 1 ½ கப் |
மிளகு | 3 டீஸ்பூன் |
சீரகம் | 5 டீஸ்பூன் |
சீரகம் | 3 துண்டு |
கறிவேப்பிலை | தேவையான அளவு |
இஞ்சி | 6-8 |
பெருங்காயத்தூள் | 1 டீஸ்பூன் |
நெய் | 6 டேபிள் ஸ்பூன் |
முந்திரி பருப்பு | தேவையான அளவு |
10 பேருக்கு வெண்பொங்கல் செய்யும் முறை:
பச்சரிசி மற்றும் பருப்பை மிதமான சூட்டில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் ஊற்றி பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
அடுத்ததாக அதில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கொள்ளவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
குக்கரில் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சிறிதளவு முந்திரி சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது அருமையான வெண் பொங்கல் தயார்.
7 நபருக்கு வீட்டிலேயே ஆப்பம் செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு..?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |