கிச்சனில் இந்த Tricks மட்டும் தெரிஞ்சா போதும் நீங்க தான் ராணி..!

Advertisement

கிச்சன் டிப்ஸ்

காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்க போகும் வரை வேலை இருந்துகொண்டே இருக்கு என்று புலம்பும் அனைத்து தாய்மார்களுக்கும் இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். கிச்சன் வேலை என்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் சமைப்பதை விட பூண்டு உரித்தல், தேங்காய் துருவுதல், வெங்காயம் உரித்தல் மற்றும் காய்கறிகள் நறுக்குதல் போன்ற வேலை தான் மிகவும் கஷ்டமாக இருக்கும். இனி நீங்கள் எந்த வித கஷ்டமும் இன்றி கிச்சன் வேலையை எளிதில் முடிப்பதற்கான டிப்ஸ் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!

Useful Kitchen Tips And Tricks in Tamil:

டிப்ஸ்- 1

பூண்டு உரித்தல்

பூண்டு உரிப்பதற்கு என்ன டிப்ஸ் என்பதை பற்றி முதலில் தெரிந்துக்கொள்ள போகிறோம். முதலில் நீங்கள் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு தோல் உரிப்பதற்கு வைத்து இருக்கும் பூண்டு பல்லை அதில் போட்டு அதனுடன் 3 ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றி கலந்து 10 நிமிடம் வெயிலில் பூண்டை நன்றாக பிரட்டி காய விடுங்கள்.

10 நிமிடம் கழித்து பிறகு காய வைத்த பூண்டினை எடுத்து பாருங்கள் தோல் தனியாக வந்து விடும். இப்போது அந்த தோலை விரைவில் கஷ்டப்படாமல் உரித்து விடலாம்.

டிப்ஸ்- 2:

lemon

இரண்டாவதாக எலுமிச்சை பழம் வீணாகாமல் இருப்பதற்கான டிப்ஸினை பற்றி பார்க்கப்போகிறோம்.

எலுமிச்சை பழம் வீணாகாமல் இருக்க முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் எலுமிச்சை பழம் மற்றும் அதனுடன் 1 ஸ்பூன் நல்லெண்ணெய்யும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒவ்வொரு பழமாக எடுத்து கையில் நல்லெண்ணெய் தொட்டு பழத்தின் மேல் தடவி விடுங்கள். அடுத்ததாக எண்ணெய் தடவிய பழத்தை ஒரு நியூஸ் பேப்பரில் பழத்தை போட்டு பந்து போல சுருட்டி விடுங்கள். இதே போல ஒவ்வொரு எலுமிச்சை பழத்தையும் செய்து கொள்ளுங்கள்.

கடைசியாக ஒரு பாலித்தீன் கவரில் பந்து போல செய்துள்ள அனைத்து பழத்தையும் அதில் போட்டு நன்றாக முடிச்சு போட்டு பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இது மாதிரி செய்தால் உங்கள் வீட்டில் எலுமிச்சை பழம் வீணாகாது மற்றும் எலுமிச்சை பழம் கருத்தும் போகாது. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்- 3

useful kitchen tips and tricks in tamil

அடுத்ததாக நாம் தெரிந்துக்கொள்ள போகும் டிப்ஸ் உருளைக்கிழங்கு வீணாகாமல் இருப்பதற்கான டிப்ஸ் தான்.

உங்கள் வீட்டில் எப்போதும் வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு இந்த மூன்றையும் தனி தனியாக வைத்து இருப்பீர்கள். மற்ற காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக வைத்து இருப்பீர்கள். அப்படி நீங்கள் வைத்து இருக்கும் காய்களில் சில நேரம் உருளைக்கிழங்கு முளைத்து கருப்பாக மாறி வீணாகிவிடும்.

ஆகையால் இனிமேல் உருளைக்கிழங்கு வாங்கியவுடன் அதனை பூண்டு இருக்கும் கூடையில் வைத்து விடுங்கள்.

இது மாதிரி நீங்கள் செய்தால் உருளைக்கிழங்கு பிரிட்ஜில் வைக்காமலேயே வீணாகாமல் அப்படியே இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ பாத்திரம் கழுவுவதில் இப்படி ஒரு Idea இருக்கா தெரியாம போச்சே..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement