5 Members of Dosa Batter Ingredients List in Tamil
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் பெண் என அனைவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் அனைவரின் காலை பொழுதும் மிகவும் பரபரப்பாகவே இருக்கும். ஏனென்றால் நாம் நமது வேலைக்கு தயாராகி கொண்டிருப்போம். மேலும் நமது குழந்தைகள் தங்களது பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருப்பார்கள். இதே நேரத்தில் நமக்கும் நமது குழந்தைகளுக்கு தேவையான உணவினையும் தயாரிக்க வேண்டும். அதனால் நாம் அனைவருக்குமே காலை உணவாக நினைவிற்கு வருவது இட்லி மற்றும் தோசை தான். அதனால் அதற்கான மாவினை நமது வீடுகளிலேயே அரைத்து கொள்ள நினைப்போம். ஆனால் ஒரு சிலருக்கு இட்லி மற்றும் தோசை மாவு அரைப்பதற்கு தேவைப்படும் பொருட்களின் அளவு சரியாக தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 5 பேருக்கு தோசை செய்ய தேவைப்படும் தோசை மாவினை அரைக்க தேவைப்படும் பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
5 பேருக்கு தோசை செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு பட்டியல்:
பொருள்களின் பெயர் | அளவுகள் |
அரிசி | 2 1/2 கப் |
உளுத்தம் பருப்பு | 1/2 கப் மற்றும் 2 தேக்கரண்டி |
வெந்தயம் விதைகள் | 3/4 தேக்கரண்டி |
உப்பு | 1 1/4 தேக்கரண்டி |
தண்ணீர் | தேவையான அளவு |
5 பேருக்கு தோசை மாவு அரைக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 1/2 கப் அரிசி மற்றும் 3/4 தேக்கரண்டி வெந்தயம் விதைகள் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
அதேபோல் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் மற்றும் 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பினையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 முதல் 2 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.
முதலில் உளுத்தம் பருப்பினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அரைத்து கொள்ளுங்கள். பொதுவாக உளுந்தினை அரைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து தான் அரைக்க வேண்டும். அப்பொழுது தான் உளுந்து மாவு அதிக அளவு கிடைக்கும்.
இப்பொழுது நாம் அரைத்த உளுந்து மாவினை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் நாம் ஊறவைத்துள்ள 2 1/2 கப் அரிசி மற்றும் 3/4 தேக்கரண்டி வெந்தயம் விதைகளை நன்கு சுத்தம் செய்துவிட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இதனை நாம் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே 1 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கவிடுங்கள். அதன் பிறகு நீங்கள் தோசை ஊற்றிக்கொள்ளுங்கள்.
7 நபருக்கு வீட்டிலேயே ஆப்பம் செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |