மண்பானை டிப்ஸ் | A Few Tips Before Cooking in Pot in Tamil
வணக்கம் நண்பர்களே..! என்ன தான் நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு மாறி இருந்தாலும், தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் மாறாத ஒன்றாக இருக்கிறது. அப்படி மாறாமல் இருக்கும் விஷயங்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம். அப்படி சொல்ல வேண்டிய விஷயங்களில் மண் பானையும் ஓன்று. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருமே மண் பானையில் சமைத்து தான் சாப்பிட்டு வந்தார்கள். மண் பானையில் சமைத்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது. அதை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 மண்பானை பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
மண் பானையில் சமைப்பதற்கு முன் சில டிப்ஸ்:
பொதுவாக இன்றைய நிலையில் பலரும் மண் பானையில் சமைத்து சாப்பிடுகிறார்கள். என்ன தான் மண் பானையில் சமைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் இருந்தாலும் அதில் செய்யும் உணவுகளுக்கு தனி ருசி என்றுமே உண்டு.
அதுபோல சிலருக்கு மண் பானையில் சமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. அதனால் மண் பானை வாங்கி வந்ததும் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காணலாம்.
♦ நாம் மண் பானைகளை புதிதாக வாங்கி வந்தால், அதை வெறும் தண்ணீரில் கழுவி சமைக்கப் பயன்படுத்தக் கூடாது.
மண்பானையில் உள்ள தண்ணீர் மட்டும் ஏன் ஜில் என்று இருக்கிறது தெரியுமா |
♦ அதற்கு பதிலாக புதிதாக வாங்கி வந்த மண்பானையை 8 முதல் 10 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவிட வேண்டும். காரணம் மண்பாண்டங்களில் காணப்படும் நுண்துறைகளில் ஈரப்பதம் உருவாகி, வெப்பத்தினை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
♦ அடுத்து நாம் வாங்கி வந்த புது மண் பானையில், கோதுமை மாவை பானையின் உள் பகுதியில் எல்லா இடங்களிலும் படும்படி தடவவேண்டும். பின் இந்த மண் பானையை அடுப்பில் வைத்து மாவு கருகும் வரை வெப்பப்படுத்த வேண்டும். இதுபோல செய்வதால் பானையில் படிந்திருக்கும் மண்துகள்கள் உதிர்ந்து வந்துவிடும்.
♦ இப்போது பானை குளிர்ந்த பின் அதில் இருக்கும் மாவை ஒரு துணியை வைத்து துடைத்துவிட்டு, கழுவி சமையலுக்கு பயன்படுத்தலாம். இவை தான் பானையை வாங்கி வந்ததும் செய்ய வேண்டிய முக்கிய முறைகள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |