நீங்கள் தினமும் பயன்படுத்தும் AC-யில் செய்யக்கூடாத 8 தவறுகள் தெரியுமா…?

Advertisement

குளிரூட்டி:

வணக்கம் நண்பர்களே..!. உங்களுடைய வீட்டில் AC (குளிரூட்டி) இருக்கா?. அப்படி AC  இருந்தால் இன்றைய பதிவு படித்து பாருங்கள் உங்களுக்கு மிகவும்  பயனுள்ள தகவல்களாக இருக்கும். நமக்கு AC-யில் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆகவே  நீங்கள் தினமும் உபயோகிக்கும் போது AC-யில்  மறந்தும் கூட இந்த 8 தவறுகளை செய்யாதீர்கள். அந்த மாதிரியான தவறுகளை செய்யும்போது உங்களுடைய AC விரைவில் பழுதாகிவிடும். மேலும் அந்த தவறுகள் என்னென்ன அதை எப்படி செய்யாமல் தவிர்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

குழந்தையை ஏசியில் தூங்க வைப்பவர்களா நீங்கள்..!

ஏசி -யில் செய்ய கூடாத தவறுகள் :

புதிதாக ஒரு பொருள் வாங்கினால் எல்லோரும் பழுது ஏற்படக்
கூடாதென்று நினைப்பார்கள். தினமும் பயன்படுத்த கூடிய AC -யில்
செய்யக்கூடாத தவறுகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

ஜன்னலை திறந்து வைக்கக்கூடாது:

உங்கள் வீட்டில் AC  இருந்தால் மறந்தும் ஜன்னலை திறந்து வைக்காதீர்கள். அறையில் இருந்து சூடான காற்றை வெளியேற்றும் வேலையை AC செய்யும் நிலையில் வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவினை திறந்து வைத்தால் AC விரைவில் பழுது அடைந்து விடும். அதனால் மறந்தும் இப்படி செய்யக்கூடாது.

எந்த நேரமும் AC ON-ல் இருக்கக்கூடாது:

AC எக்காரணத்தை காட்டியும் எந்த நேரமும் ON -ல் இருக்கவே கூடாது. அப்படி ON -னில் இருக்கும் போது அறையின் வெப்பநிலை மற்றும் AC-யின் தொழிநுட்பத்தையும் பாதிக்கும். அறை போதுமான குளிர்ச்சி அடைந்த பிறகு AC -யை OFF செய்து விடவேண்டும்.

AC -யின் வெப்பநிலையை குறைத்து வைத்தல்:

உங்கள் வீட்டில் இருக்கும் AC -யின் வெப்பநிலை குறைத்து வைப்பதன் மூலம் அறை உடனடியாக குளிர்ச்சி அடையாது. AC -யில் இருந்து வெளியேறும் காற்றின் அளவை பொறுத்துதான் அறை குளிர்ச்சி அடையும். அதனால் AC -யின் வெப்ப நிலையை குறைத்து வைக்கக்கூடாது.

AC- யில் உள்ள Fan பயன்பாடு:

AC ON-ல் இருக்கும் போது AC -யில் உள்ள Fan -னை பயன் படுத்தக்கூடாது. Fan ல் இருந்து வெளியேறும் காற்றின் மூலமாகதான் அறை குளிர்ச்சி அடையவேண்டும்.

AC பில்ட்டர் மாற்றுவது:

AC- யில் உள்ள பில்ட்டரை குறிப்பிட்ட காலத்தில் மாற்றவேண்டும். AC பில்ட்டர் மாற்றாமல் அப்படியே இருந்தால் உங்களினுடைய AC விரைவில் பழுதடைந்துவிடும் .

 சர்விஸ் செய்யாமல் இருப்பது:

உங்கள் வீட்டில் இருக்கும் AC குளிர்காலத்தில் பயன்படாமல் இருக்கும். பிறகு மறுபடியும் நீங்கள் AC -யை பயன்படுத்தம் போது சர்விஸ் செய்யவேண்டும். இடைவெளி கொஞ்ச நாட்கள் விட்டு AC -யை பயன்படுத்தும் போது சர்விஸ் செய்யவில்லை என்றால் AC பழுதாகிவிடும்.

AC- யில் சத்தம் வருதல்:

AC ON-ல் இருக்கும் போது ஏதாவது சத்தம் ஏற்பட்டால் உடனே AC -யை OFF செய்யவேண்டும். அப்படி சத்தம் வந்தால் AC-யின் உள்ளே பழுது அடைந்து இருக்கும்.

அறைக்கு ஏற்றவாறு AC வாங்கவேண்டும்:

நீங்கள் வாங்கும் AC-யில் இருந்து வரும் காற்றின்அளவு அறைக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் AC இருக்கும் அறை குளிர்ச்சி அடையாது. AC தான் பழுது அடைந்துவிடும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

Advertisement