Adi Piditha Paal Pathiram
அனைவருடைய வீட்டிலும் தினமும் பால் காய்ச்சும் பழக்கம் ஆனது இருக்கும். அவ்வாறு நாம் பால் காய்ச்சும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அடுப்பில் பால் வைத்து விட்டு ஒரு 2 நிமிடம் வேறு ஏதாவது வேலைக்கு சென்று விட்டோம் என்றால் அந்த பாத்திரம் கருகி போய்விடும். இவ்வாறு கருகி போன அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒரு செயலாக தான் இருக்கும். அதிலும் சில பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு 1 வாரத்திற்கு மேல் கூட ஆகும். இனி நீங்கள் இதுமாதிரி கஷ்டப்பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய டிப்ஸ் பதிவில் அடி பிடித்த பால் பாத்திரத்தை புதியபோல் பளபளக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவினுள் செல்லலாம்.
அடி பிடித்த பாத்திரத்தை கழுவுதல்:
அடிப்பிடித்த பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதனை எளிய முறையில் சுத்தம் செய்ய முடியாது. அதற்கு என்று நாம் தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இதுமாதிரி கஷ்டப்படாமல் இருக்க கீழே ஒரு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் பொருட்கள்:
- உப்பு- 1 ஸ்பூன்
- துணி துவைக்கும் பவுடர்- 1 ஸ்பூன்
- பாத்திரம் கழுவும் ஜெல்- 1 ஸ்பூன்
வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..
பாத்திரம் கழுவும் முறை:
ஸ்டேப்- 1
முதலில் அடிபிடித்த பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அந்த பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் தண்ணீர் எடுத்துவைத்துள்ள அடிபிடித்த பாத்திரத்தை வைத்து தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு கொதித்த தண்ணீரை வெளியே எங்கேயாவது ஊற்றி விட்டு பாத்திரத்தை 2 நிமிடம் ஆற விடுங்கள்.
ஸ்டேப்- 3
2 நிமிடம் கழித்த பிறகு எடுத்துவைத்துள்ள உப்பு மற்றும் துணி துவைக்கும் பவுடர் கொண்டு அடிபிடித்த பாத்திரத்தை நன்றாக தேய்த்து சுத்தும் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது அடிபிடித்த பால் பாத்திரம் பாதி பளிச்சென்று மாறி விடும்.
ஸ்டேப்- 4
அடுத்து வழக்கமாக பயன்படுத்தும் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஜெல் கொண்டு மீண்டும் ஒரு முறை பாத்திரத்தை நன்றாக தேய்த்து சுத்தும் செய்து கழுவி விடுங்கள்.
இத்தகைய முறையினை பின்பற்றிய பிறகு பாத்திரத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் அடிப்பிடித்த பால் பாத்திரம் புதியதுபோல் பளிச்சென்று மாறிவிடும்.
கிச்சன் முதல் டாய்லட் வரை பளிச்சென்று இருக்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |