அடி பிடித்த பாத்திரத்தை கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டாம்.!

Advertisement

அடி பிடித்த பாத்திரம்

பாத்திரம் தேய்ப்பது என்பது கஷ்டமான வேலையாக இருக்கிறது. இதனை சுத்தப்படுத்துவதற்குள்போதும் போதும் என்றாகிவிடும். காலையில் சமைத்த பாத்திரத்தை கழுவி விட்டு உட்காருவார்கள். அதற்குள் நான்கு பாத்திரம் சேர்ந்து விடும். அதிலும் அடி பிடித்த பாத்திரத்தை சுத்தப்படுத்துவது சுலபமான வேலை அல்ல. அதனை ஊற வைத்து தேய்த்தாலும் அதில் கறைகள் நீங்கியிருக்காது. அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு மறந்து விடுவார்கள். அது அப்படியே அடி பிடித்து நாற்றம் வரும் அப்போது தான் அய்அய்யோ அடுப்பில் பாத்திரத்தை வைத்தோமே என்ற ஞாபகமே அப்போது தான் வரும். அதனால் தான் இந்த பதிவில் அடி பிடித்த பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

அடி பிடித்த பாத்திரம் சுத்தம் செய்வது எப்படி.?

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

டிப்ஸ்:1

அடி பிடித்த பாத்திரம்

முதலில் அடி பிடித்த பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அந்த பாத்திரத்தில் எது வரைக்கும் அடி பிடித்து இருக்கிறதோ அது வரைக்கும் தண்ணீரை நிரப்பி கொள்ளவும். பின்பு அதில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் உள்ள சாற்றை மட்டும் பிழிந்து விடவும். பிறகு இதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். தலப்புல வென்று கொதித்த பிறகு அடுப்பை அணைத்து ஆற விடவும்.

பாத்திரத்தின் சூடு ஆறியதும் கம்பி நாரை வைத்து லேசாக தேய்த்தால் அதில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி பாத்திரம் புதிது போல காட்சியளிக்கும்.

வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..

டிப்ஸ்:2

அடி பிடித்த பாத்திரம்

அடி பிடித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொள்ளவும். அதில் எது வரைக்கும் அடி பிடித்து இருக்கிறதோ அது வரைக்கும் தண்ணீரை நிரப்பி கொள்ளவும். இதனுடன் உப்பு சிறிதளவு, வினிகர் சிறிதளவு, பேக்கிங் சோடா சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தலப்புல வென்று கொதித்தவுடன் அடுப்பை அணைத்து பாத்திரத்தின் சூட்டை ஆற விடவும். பிறகு கம்பி நாரை வைத்து தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

கிச்சன் முதல் டாய்லட் வரை பளிச்சென்று இருக்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement