Amazing Cooking Tips
பொதுவாக சில நபர்களுக்கு சமைப்பதற்கு நேரம் அதிகமாகும், சில பேர் சீக்கிரமே சமைத்து விடுவார்கள். எப்படி தான் இவ்வளவு சீக்கிரமே சமைக்கிறார்கள் என்று அவர்களை பார்த்து வியத்துள்ளோம். அவர்கள் சில டிப்ஸ்களை பயன்படுத்தி தான் சீக்கிரமே சமைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில பேர் சீக்கிரமீ சமைப்பது மட்டுமில்லாமல் பாத்திரமும் இருக்காது. இதற்கு காரணம் அவர்கள் சமைக்கும் போதே பாத்திரங்களையும் விளக்கி விடுவார்கள். இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் பல டிப்ஸ்களை பதிவிட்டுள்ளோம். அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெயில்காலம்:
வெயில்காலத்தில் பெருங்காயம் ஆனது கட்டியாகிவிடும். இதனை தவிர்ப்பதற்கு பெருங்காய டப்பாவில் 1 பச்சை மிளகாயை போட வேண்டும். இப்படி போடுவதன் மூலம் பெருங்காயம் கட்டியாகாமல் இருக்கும்.
தயிர் புளிக்காமல் இருக்க இஞ்சி சிறிதளவு எடுத்து சீவி கொள்ள வேண்டும். இதனை தயிரில் சேர்த்து கொள்ள வேண்டும். ஐப்பசி சேர்ப்பதன் மூலம் தயிர் ஆனது அதிகம் புளிக்காமல் இருக்கும்.
இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்
இட்லி சாம்பார்:
இட்டலி சாம்பார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக வைப்பார்கள். இதனின் சுவையை அதிகரிக்க கடாயில் சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை வறுத்து விட்டு, ஆறிய பிறகு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து சாம்பாரில் சேர்க்க வேண்டும்.
பால் அடிபிடிக்காமல் இருக்க:
பால் காய்ச்சும் போது பால் அடிபிடிக்காமல் இருப்பதற்கு சிறுதளவு தண்ணீர் ஊற்றி அலசி கொள்ள வேண்டும். அதன் பிறகு பாலை காய்ச்சினால் அடிபிடிக்காமல் இருக்கும்.
கீரையின் பச்சை நிறம் போகாமல் இருக்க:
கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருப்பதற்கு சிறுதளவு சர்க்கரையை சேர்த்து சமைக்க வேண்டும். இப்படி சமைப்பதன் மூலம் கீரையின் ருசி சற்று அதிகமாகவும், நிறம் மாறாமலும் இருக்கும்.
தேங்காய் மீதமானால்:
சில நேரங்களில் தேங்காய் திருகும் போது அதிகமகிவிடும்.தேங்காய் மறுநாள் இருந்தால் வீணாகிவிடும் என்று நினைத்து கீழே போட்டு விடுவார்கள். பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் வீட்டில் தேங்காயை அதில் ஸ்டோர் செய்திவிடுவார்கள். பிரிட்ஜ் இல்லாத வீட்டில் தேங்காய் துருவல் மீதமானால் இந்த டிப்ஸை follow பண்ணுங்க. இந்த தேங்காய் துருவலை வதக்கி விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் வரைக்கும் வீணாகாமல் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |