வாயில் வைத்ததும் வழுக்கி ஓடும் மிகவும் சுவையான பாதாம் அல்வா இப்படி செய்யுங்க..!

Advertisement

Badam Halwa Recipe in Tamil

பொதுவாக பண்டிகை காலம் அல்லது ஏதாவது குடும்ப விழாக்கள் வந்துவிட்டாலே நமது மனம் முதலாவது சிந்தனை செய்வது நமது பண்டிகை அல்லது விழாக்களில் என்ன உணவுகள் அல்லது பலகாரம் செய்வது என்பது தான். அப்படிபட்ட முக்கியமான விழாக்கள் அல்லது பண்டிகை காலங்களில் நாம் எப்பொழுது செய்து சுவைக்கின்ற உணவுகள் மற்றும் பலகாரங்களை தாண்டி வேறு ஏதாவது சுவையான உணவுகளை அல்லது பலகாரங்களை செய்து சுவைக்க வேண்டும் என்று நாம் அனைவரின் மனமும் விரும்பும். அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் சுவையான பாதாம் அல்வா செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த பாதாம் அல்வாவை எவ்வாறு செய்வது என்பதை அறிந்து கொண்டு செய்து சுவைத்து பாருங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Easy Badam Halwa Recipe in Tamil:

Badam Halwa Ingredients in Tamil

மிகவும் சுவையான மிகவும் எளிமையான பாதாம் அல்வா எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பாதாம் – 1 கப் 
  2. சர்க்கரை – 1 கப் 
  3. பால் – 3/4 கப் 
  4. நெய் – 4 டேபிள் ஸ்பூன் 
  5. குங்குமபூபால் – 2  டேபிள் ஸ்பூன் 
  6. முந்திரி – 10 
  7. காய்ந்த திராட்சை – 5
  8. ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன் 
  9. தண்ணீர் – தேவையான அளவு

ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பாதாமை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனின் தோலினை நீக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 3/4 கப் பாலை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 முந்திரி மற்றும் 5 காய்ந்த திராட்சையை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த தீபாவளிக்கு சுவையான காஜு கத்லி ஈசியா செய்வது எப்படி

ஸ்டேப் – 3

அதே கடாயில் 3 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே 1 கப் சர்க்கரை மற்றும் 2  டேபிள் ஸ்பூன் குங்குமபூ ஊறவைத்த பாலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Almond halwa recipe in tamil

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து நன்கு திரண்டு வரும் நேரத்தில் 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் நாம் முன்னரே வறுத்து வைத்திருந்த முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடியின் ரகசியம் இதுதான்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement