Badam Kaju Katli Recipe in Tamil
பொதுவாக பண்டிகை என்றாலே இனிப்பு பலகாரங்கள் முதலிடம் பிடிக்கும். அதாவது, அணைத்து சுப காரியங்கலும் இனிப்பு இல்லாமல் நடைபெறாது. அதிலும், குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைகளில் ஸ்வீட் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பலவகையான ஸ்வீட் செய்வோம். அந்த காலத்தில் எல்லாம் தீபாவளிக்கு ஒரு பெரிய பாத்திரம் அல்லது வாளி முழுவதும் முறுக்கும் அதிரசம் போன்றவற்றை செய்து அடிக்கி வைத்திருப்பார்கள். தீபாவளி பலகாரம் என்றால் முறுக்கு, அதிரசம், தேங்காய் பாறை, சுழியம் தான் நினைவிற்கு வரும். இந்த வருட தீபாவளிக்கு கொஞ்சம் புதுசாக இந்த முந்திரி பாதாம் கட்லி செய்து பாருங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Badam Katli at Home in Tamil:
தேவையான பொருட்கள்:
- பாதாம் –200 கிராம்
- முந்திரி -100 கிராம்
- பனங்கற்கண்டு – 300 கிராம்
- தண்ணீர் – 75 மி.லி
- குங்குமப்பூ – 1 டீஸ்பூன்
- நெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். இதில் பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து பொடியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அதன் பிறகு, மீண்டும் ஒரு மிக்ஸி ஜாரில் பனங்கற்கண்டு சேர்த்து அதனையும் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் அரைத்து வைத்த பனங்கற்கண்டை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அடுத்து பனங்கற்கண்டு கரையும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கிளறி விடுங்கள். பனங்கற்கண்டு நன்றாக கரைந்ததும், அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாம் தூளை சேர்த்து கிளறி விடவும்.
ஸ்டேப் -5
பின்பு, சிறிதளவு தண்ணீரில் குங்குமப் பூவை சேர்த்து கரைத்து இதில் சேர்த்து கொள்ளுங்கள். இந்நிலையில் அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி விடுங்கள்.
ஸ்டேப் -6
இறுதியாக சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி இறக்கி விடுங்கள்.
ஸ்டேப் -7
ஒரு பெரிய அகலமான தட்டில் நெய் தடவி, கெட்டியான கலவையை வைத்து சமமான அளவில் வைத்து தேய்த்து விடுங்கள்.
ஸ்டேப் -8
அதன் பிறகு, உங்களுக்கு விருப்பமான அளவில் அதாவது சதுரம், வட்டம், டைமண்ட் வடிவில் வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதாங்க.. சுவையான முந்திரி பாதாம் கட்லி எளிதில் ரெடி.!
கோதுமை மாவு இருந்தா இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபி செய்து பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |