Baking Soda Cleaning Tips in Tamil
வீட்டை சுத்தமாக வைக்க தினமும் எவ்வளவு வேலை பார்த்தாலும் வீடு சுத்தமாக இல்லை, இதற்கு என்னதான் செய்ய வேண்டும் என்று யோசனையாக இருக்கும். நம்முடைய Pothunalam.com தினமும் வீட்டை சுத்தமாக வைக்க பல்வேறு விதமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதனை பற்றி தெரிந்துகொள்ள எப்போதும் போல் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதனை விட முக்கியமாக வீட்டில் இருக்கும் ஒரு பொருளை வைத்து வீட்டில் சுத்தம் செய்ய முடியாத இடத்தை எப்படி சுத்தம் செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம். வாங்க தெரிந்து கொள்வோம்..!
Baking Soda Cleaning Tips in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Tiles Cleaning Tips:
வீட்டில் டையில்ஸ் இருக்கக்கூடிய அதுவும் இரு டையில்ஸ்க்கும் இடையில் கறைகள் இருக்கும். அதனை எப்படி மோப் போட்டு சுத்தம் செய்தாலும் அதனுடைய இடையில் இருக்கும் கரைகள் போகாது. முக்கியாக சமையல் அறையில் எண்ணெய் கரை அதிகமாக இடையில் இருக்கும்.
அதற்கு ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பல் துலக்கும் பிரஸ் வைத்து அதன் இடையில் சுத்தம் செய்யவேண்டும். பின்பு அதன் இடையில் உள்ள கறைகள் வெளியில் வைத்து விடும். அதன் பின் துணியை வைத்து தண்ணீர் தொட்டு துடைத்து விடுங்கள். மேலும் இது போல் சமையல் முடித்த பிறகு செய்து விட்டால் கஷ்டமாக இருக்காது.
Wash Basin Cleaning Tips:
வாஸ்பேஷன் எப்போதும் பயன்படுத்துவதால் அதில் நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள கரையாக மாறி அது ஒரு மாதிரி பழுப்பு நிறத்தில் வந்துவிடும். ஆகவே அதை கிளீன் செய்தால் அது அதே நிறத்தில் தான் இருக்கும்.
ஆகவே அதில் பேக்கிங் சோடாவை தூவிக் கொள்ளவும். அதன் பின் அதில் ஏதாவது கிளீனிங் பவுடர் தூவிக் கொள்ளவும். அதன் பின் கம்பி நாரை வைத்து துடைத்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது பொருளை வைத்து சுத்தம் செய்தாலும் சரி நிறம் மாறி புத்தம் புதிய வாஷ்பேஷன் போல் மாறி விடும்.
Clean Comb Tips in Tamil:
நமக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அதில் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சீப்பு மிகவும் முக்கியமானது. இதனை வாரத்தில் 1 முறை சுத்தம் செய்து தான் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே அதனை சுத்தம் செய்ய ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சூடான வெந்நீர் வைத்து அதில் பேக்கிங் சோடா போடவும். அதன் பின் அதில் நாம் பயன்படுத்தும் சீப்பை போடவும். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் சீப்பில் உள்ள அழுக்கள் அந்த தண்ணீரில் வைத்து விடும். அதன் பிறகு கடைசியில் பிரஸ் வைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
Cupboard Cleaning Tips in Tamil:
வீட்டில் கபோடு இருக்கும் அதில் சில நேரத்தில் நாற்றம் வீசும். அதனை போக்கவும் அதன் பின் வீட்டில் சோபா இருக்கும். அதில் தெரியாமல் சாப்பிடும் பொருட்கள் சிந்திவிடும். அதை போக்கவும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க.
ஒரு ஸ்பிரே பாட்டிலில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா அதன் பின் 1 டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். உங்களுக்கு பிடித்த எசன்ஷியல் லிக்விடு சேர்த்து கலந்துவிட்டு சோபா மற்றும் கபோடு உள் பக்கம் ஸ்பிரே செய்தால் எந்த ஒரு நாற்றமும் வீசாது.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 கொசு கடியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |