பாத்ரூம் முழுவதையும் சுத்தம் செய்வதற்கு இதை மட்டும் செய்யாமல் இருக்காதீர்கள்..!

Advertisement

Baking Soda For Bathroom Cleaning

நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான வேலை என்று தான் கூற வேண்டும். ஆனால் வீட்டை மிகவும் எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். ஒரு சாத்தியமற்ற செயல் என்றால் அது பாத்ரூமை சுத்தம் செய்வது என்று தான் கூற வேண்டும். நாமும் எப்படியாவது பாத்ரூமை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று என்ன என்னவோ ட்ரை செய்து கொண்டு இருப்போம். ஆனால் அவற்றை எதற்கும் நமக்கு முழுமையான பலனை கிடைத்து இருக்காது. அதனால் மிகவும் எளிய முறையில் வீட்டின் பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாத்ரூம் சுத்தம் செய்வது எப்படி.?

டிப்ஸ்- 1

பாத்ரூம் கறை நீங்க

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் 1/ 2 கப் பிளீச்சிங் பவுடர் தண்ணீர் அல்லது பேக்கிங் சோடா தண்ணீர் சேர்த்து ஒரு குச்சியால் கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து உங்களுடைய வீட்டில் உள்ள பாத்ரூமில் கருப்பாக பூஞ்சை உள்ள இடத்தில் தெளித்து விட்டு. 5 நிமிடம் கழித்து பிரஷால் தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள். இதுமாதிரி செய்தால் போதும் பாத்ரூமில் உள்ள கருப்பு நீங்கி விடும். 

டிப்ஸ்- 2

 பாத்ரூம் சுத்தம் செய்வது எப்படி

பாத்ரூம் டைல்ஸில் விடாப்பிடியான கறை படிந்து துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கும். அதனை சரி செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் பல் துலக்கும் பேஸ்ட் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனுடன் பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் வைத்து கொள்ள வேண்டும்.

5 நிமிடம் கழித்த பிறகு அந்த கரைசலை பாத்ரூமில் தெளித்து 20 நிமிடம் ஊறவைத்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக பிரஷால் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத்ரூம் பளிச்சென்று ஆகிவிடும். 

இனி வீடு துடைக்க கடையில் சென்று Liquid வாங்க தேவையில்லை.! வீட்டிலேயே Liquid செய்து தரையை பளிச்சென்று ஆக்கலாம்..

டிப்ஸ்- 3

bathroom cleaning tips in tamil

பாத்ரூம் ஜன்னலில் உள்ள கறைகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு மற்றும் பல்துலக்கும் பேஸ்ட் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள்.

5 நிமிடம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள கரைசலை ஜன்னலில் தெளித்து பிரஷால் தேய்த்து மீண்டும் ஒரு முறை சுத்தமான தண்ணீரால் துடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாத்ரூம் ஜன்னல் சுத்தமாகிவிடும்.

மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று முறைகளையும் நீங்கள் பின்பற்றும் போது உங்களுடைய பாத்ரூம் டைல்ஸ், கறை மற்றும் ஜன்னல் ஆகியவற்றை சுத்தம் செய்து விடலாம்.

வீடு துடைக்க கஷ்டமா இருக்கா..! இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க இனி கஷ்டமே இருக்காது

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement