Baking Soda in Toilet For Smell
பாத்ரூமை கட்டிய புதிதில் பளிச்சென்றும், வாசனையாகவும் இருக்கும். ஆனால் நாளடைவில் பாத்ரூமில் நாற்றமும், நீக்க முடியாத கறையும் வந்துவிடும். நீங்கள் பாத்ரூமை தினமும் கிளீன் செய்தாலும் அதில் உள்ள கறைகள் நீங்காமல் இருக்கும். இந்த பதிவில் பாத்ரூமில் உள்ள கறைகளை நீக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்தினால் கறைகள் நீங்கிவிடும். அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பாத்ரூம் கறைகளை நீக்க பேக்கிங் சோடா:
ஒரு கப்பில் தண்ணீர் சிறிதளவு எடுத்து கொள்ளவும். அதனுடன் பேக்கிங் சோடா சிறிதளவு, வினிகர் 2 மூடி சேர்த்து கலந்து கொள்ளவும். முக்கியமாக கைய பயன்படுத்தாதீர்கள். ஒரு குச்சியை பயன்படுத்தி கலந்து விடவும். இந்த கலவையை கலந்த பிறகு பாத்ரூமில் ஊற்றி 10 நிமிடம் அப்படியே விடவும். 10 நிமிடம் கழித்து பிரஷை பயன்படுத்தி தேய்த்து கொள்ளவும்.
பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக இந்த நாளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்க
அதன் பிறகு பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை பாத்ரூமில் அப்ளை செய்து பிரஷை பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும்.
பாத்ரூம் கறைகளை நீக்க கோலமாவு:
பாத்ரூம் தரைகள் பாசி அல்லது வழவழப்பாக இருக்கும். இதனை நீக்குவதற்கு கோலமாவை பயன்படுத்தலாம். கோலமாவை பாத்ரூம் தரையில் முழுவதும் தூவி விட்டு வார்கோல் பயன்படுத்தி ஒரு முறை தேய்த்து விடவும். இது அப்படியே 1 மணி நேரம் அப்படியே விடவும். 1 மணி நேரம் கழித்து வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீரை கழுவ வேண்டும்.
பாத்ரூம் எப்பொழுதும் பளிச்சென்று இருக்க எலுமிச்சையை இப்படி பயன்படுத்துங்கள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |