வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

Banana Peel Uses in Tamil

வாழைப்பழ தோல் பயன்கள் | Banana Peel Uses in Tamil

வணக்கம் நண்பர்களே (Banana Peel Uses in Tamil).. பொதுவாக வாழைப்பழம் சாப்பிடுவது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் வாழைப்பழ தோல் வாழைப்பழத்தை விட மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ஒன்று என்று உங்களுள் யாருக்காவது தெரியுமா?.. ஆம் நண்பர்களே வாழைப்பழ தோல் பல வகையான விஷயங்களுக்கு மிகவும் பயன்படுகிறது. அது என்னென்ன விஷயம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

வாழைப்பழ தோல்:

வாழைப்பழ தோல் பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மை, ஆண்டிபயாடிக் (Antibiotic) பண்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்டதாகும்.  எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.

செடிகளுக்கு ஊட்டமளிக்கும்:

வாழைப்பழம் தோல் செடிகளுக்கு மிகவும் சிறந்த ஊட்டச்சத்தாக விளங்குகிறது. வாழைப்பழம் தோல் மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. அதேபோல் கார்பன் டை ஆக்சைடை விட 84 மடங்கு தீவிரமானது இந்த வாழைப்பழ தோல். அரைவாளி தண்ணீரில் 5 அல்லது 6 வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து அந்த நீரில் சேர்த்து நன்றாக மூடிவிடுங்கள். பிறகு மூன்று நாள் கழித்து தண்ணீரை திறந்து ஒரு குச்சியை பயன்படுத்தி நன்றாக கலந்துவிடவும், பிறகு வடிகட்டி செடிகளில் 1/2 கப் அளவு ஊற்றி விடலாம். இப்படி செய்வதினால் செடிகள் நன்கு வளரும், மேலும் பூச்செடியாக இருந்தால் செடிகள் நன்கு வளரும்.

விலையில்லா ஷூ பாலிஷ்:

வாழைப்பழ தோலை பயன்படுத்தி நீங்கள் ஷூவிற்கு பாலிஷ் போடலாம். ஷூ மிகவும் பளபளப்பாக பாலிஷ் போட்டது போல் இருக்கும். ஷூ பாலிஷ் வாங்குவதற்கு செலவு செய்வதற்கு பதில் இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்.

வெட்டு காயங்களுக்கு:

திடீரென்று எதாவது கிளாஸ், முள், இரும்பு துகள்கள் உங்கள் கால், கை அல்லது உடம்பில் எதாவது பகுதியில் குத்தி பத்தி சிறிதளவு உங்கள் உடலிலேயே உடைந்துவிட்டால், அதனை வலியில்லாமல் அகற்ற வாழைப்பழ தோல் மிகவும் பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் வாழைப்பழ தோலை வைத்து ஏதாவது லேபிளில் நன்றாக விடுங்கள் சிறிது நேரம் ஆக ஆக வாழைப்பழத்தோலில் உள்ள நொதிகள் உங்கள் தோலின் மேற்பரப்பில் அதனை கொண்டு வர உதவுகின்றன, எனவே நீங்கள் அதை எளிதாக அகற்றலாம்.

இறைச்சி உணவுக்கு:

இறைச்சி உணவுகளை சமைக்கும் பொழுது வற்றில் சிறிதளவு வாழைப்பழ துண்டை நறுக்கி போட்டுவிடலாம். இவ்வாறு போடுவதினால் உணவில் தேவையான ஈரப்பதம் இருக்கும், அதேபோல் அந்த இறைச்சி உணவும் மென்மையாகமற்ற உதவுகிறது.

சரும பிரச்சனைகள் சரியாகும்:

சருமத்தில் பருக்கள், தழும்பு, கரும்புள்ளிகள், கருவளையம், முக சுருக்கம் இது போன்ற பிச்சனைகள் உள்ளவர்கள் வாழைப்பழத்தை முகத்தில் நன்றாக அப்ளை செய்து, வாழைப்பழ தோலால் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதினால் கூடிய விளைவில் சரும பிரச்சனை சரியாகிவிடும்.

இதையும் படியுங்கள் 👉 உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil
SHARE