உப்புகறை படிந்த பாத்ரூம் & கிச்சனை 5 நிமிடத்தில் கிளீன் செய்திடலாம்..! Bathroom and Kitchen Cleaning Tips in Tamil..!
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் மிக பெரிய வேலை எதுவென்றால் உப்புக்கறை படிந்த பாத்ரூம் மற்றும் கிச்சனை சுத்தம் செய்வது தான். பாத்ரூம் மற்றும் கிச்சனை சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆக உப்புக்கறை படிந்துள்ள பாத்ரூம், கிச்சன் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கான ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க உள்ளோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- துணிப்பவுடர் – இரண்டு ஸ்பூன்
- டெட்டால் – ஒரு மூடி
- கல் உப்பு – ஒரு ஸ்பூன்
- பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
சுத்தம் செய்யும் முறை:
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் துணிப்பவுடர் இரண்டு ஸ்பூன், டெட்டால் ஒரு மூடி, கல் உப்பு ஒரு ஸ்பூன், பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்க்கவும்.
பின் அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் லிக்விட் தயார் இதனை பயன்படுத்துமுறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!
பயன்படுத்தும் முறை:
உங்களிடம் ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் அதில் ஊற்றி கொள்ளுங்கள் அல்லது ஒரு பழைய வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் தயார் செய்த லிக்விடை ஊற்றிக்கொள்ளவும்.
பின் அந்த வாட்டர் பாட்டிலின் மூடியில் ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.
இப்போது உப்புக்கறை உள்ள அனைத்து இடத்திலும் இந்த லிக்விடை ஸ்ப்ரே செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின் ஸ்கரப்பரை பயன்படுத்தி ஒரு 5 நிமிடம் தேய்த்தால் போதும் உப்புக்கறை படிந்துள்ள பாத்ரூம் மற்றும் கிச்சனில் உள்ள கறைகள் அனைத்தும் அகன்றுவிடும். கண்டிப்பாக இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். பயன்படுத்திய பிறகு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கிறதே என்று நினைப்பீர்கள். பிறகு இந்த டிப்ஸை மட்டுமே உங்கள் வீட்டில் ட்ரை செய்வீர்கள் மற்றும் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கறை பிடித்துள்ள கேஸ் Stand புதியது போல பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |