பாத்ரூம் கிளீன் செய்ய பெஸ்ட் குறிப்பு
பெண்களுக்கு பாத்திரம் கழுவுவது எவ்வளவு கஷ்டமோ அதே அளவிற்கு கஷ்டம் பாத்ரூம் கிளீன் செய்வதும். இந்த பாத்ரூமை கிளீன் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தினமும் பாத்ரூமை கிளீன் செய்தாலும் புதுசு போலவே இருக்க மாட்டிக்கிறதே என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இதற்காக கடையில் அதிக காசு கொடுத்து லீகுய்டுகளை வாங்கி பயன்படுத்தினாலும் அதற்கான பலன் இருக்காது. அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கிளீன் செய்தாலே பளிச்சென்று மாறிவிடும். அதனால் தான் இந்த பதிவில் பாத்ரூம் கிளீன் செய்ய குறிப்பை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா பாத்ரூம் கிளீன் செய்வதற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இதனை பாத்ரூம் முழுவதும் தெளித்து விடவும், அல்லது பிரஷை பயன்படுத்தி அப்ளை செய்யவும். இதனை அப்படியே 1/2 மணி நேரத்திற்கு விட வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து வார்கோல் அல்லது பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.
ஒருவேளை பாத்ரூமில் அதிகப்படியான அழுக்குகள் இருந்தால் அதனை நீக்குவதற்கு பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக எலுமிச்சை சாறுடன் இதை சேர்த்து கிளீன் செய்யுங்க..
இந்த பேக்கை பாத்ரூம் முழுவதும் தெளித்து விட்டு 1 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். அதன் பிறகு வார்கோல் அல்லது பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி கழுவினால் அழுக்குகள் எல்லாம் நீங்கி பளிச்சென்று இருக்கும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். அதிலிருந்து சாறாக பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றை பாத்ரூமில் அழுக்கு உள்ள இடத்தில் தெளித்து விட்டு வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விட வேண்டும். இதனை அப்படியே 1 மணி நேரத்திற்கு ஊற விட வேண்டும். தன் பிறகு வார்கோல் அல்லது பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி கழுவினால் அழுக்குகள் எல்லாம் நீங்கி பளிச்சென்று இருக்கும்.
இனி உங்க வீட்டில் இருக்கும் Fan-யில் ஒரு தூசி கூட இருக்காது.. இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |