பாத்ரூம் சுத்தம் செய்யும் முறை
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ரொம்ப கஷ்டமான ஒன்றாக தான் இருக்கிறது, நாம் என்ன தான் பார்த்து பார்த்துவீட்டை சுத்தம் செய்தாலும் குப்பைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதோடுமில்லமால் பாத்ரூம் கிளீன் செய்வது ஈஸியான வேலையே இல்லை. இதனை நம் ஒரு நாள் சுத்தம் செய்யாமல் விட்டாலும் வீடே நாறிவிடும்.
பாத்ரூமை சுத்தம் செய்வதற்காக காசு கொடுத்து பல லீகுய்டுகளை வாங்கி வைத்திருப்பார்கள். இதனை வைத்து பயன்படுத்தினாலும் பாத்ரூமில் இருக்கும் கறைகள் மட்டும் நீங்கி இருக்காது. அதனால் தான் இந்த பதிவில் ஈஸியான முறையில் பாத்ரூமை கிளீன் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
சிமெண்ட் தரை பாத்ரூமை கிளீன் செய்யும் முறை:
சிமெண்ட் தரை பாத்ரூம் ஆனது சீக்கிரமே பழையதாக மாறிவிடும். அதுமட்டுமில்லாமல் பாசி அதிகமாக வந்துவிடும். இதனை எப்படி சரி செய்வது என்று அறிந்து கொள்வோம்.
சிமெண்ட் தரையை சுத்தம் செய்வதற்கு வீட்டில் இருக்கும் கோலமாவு மட்டும் போதும். இந்த கோலமாவை பாத்ரூம் முழுவதும் தூவி விட வேண்டும். இதனை அப்படியே 1/2 மணி நேரத்திற்கு விட வேண்டும். அதனை பிறகு வார்கொல் அல்லது பாத்ரூம் கிளீன் செய்ய பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.
அதன் பிறகு துணி துவைக்க பயன்படுத்தும் சர்பை தூவி விட்டு சிறிது நேரம் கழித்து வார்கொல் அல்லது பாத்ரூம் கிளீன் செய்ய பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை ஊற்றி கழுவி விட வேண்டும்.
எலுமிச்சைப்பழம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்க இந்த டிப்ஸ மட்டும் Follow பண்ணுங்க..!
டைல்ஸ் பாத்ரூமை சுத்தம் செய்வது:
டைல்ஸ் பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு வீட்டில் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் மட்டும் போதும். இந்த பேஸ்ட்டை பாத்ரூமில் அப்பளை செய்து பிரஷை பயன்படுத்தி தேய்த்து விட்டு ஒரு 1/2 மணி நேரத்திற்கு அப்படியே விட வேண்டும். அதன் பிறகு வார்கொல் அல்லது பாத்ரூம் கிளீன் செய்ய பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி தேய்க்க கழுவி விட எவ்ண்டும்.
பாத்ரூமில் பாசி வராமல் இருக்க:
தண்ணீர் சுத்தமாக இருந்தால் பாசி வராது, அதுவே உப்பு தண்ணீராக இருந்தால் பாத்ரூம் ஆனது சீக்கிரம் பாசி பிடிக்க ஆரம்பித்து விடும்.
அடுத்து பாத்ரூம் பயன்படுத்தாத போது ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். எப்போது பாத்ரூமில் தண்ணீர் இருந்தால் பாசி வந்துவிடும்.
நீங்கள் எப்போ பாத்ரூம் கிழக்கும் செய்தாலும் பிளிச்சிங் பவுடர் பயன்படுத்த வேண்டும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |