அழுக்கு படிந்த பாத்ரூமை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மட்டும் போதுங்க..!

Advertisement

Bathroom Cleaning Baking Soda 

ஒருநாளை நாம் அனைவரும் தூங்கி எழுந்த நேரம் முதல் இரவு படுக்க செல்லும் நேரம் வரை எண்ணற்ற வேலைகளை செய்து வருகிறோம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். ஏனென்றால் ஒரு நாளைக்கே சுத்தம் செய்யும் வேலை மட்டும் எண்ணிலடங்காத வகையில் இருக்கும். இந்த வரிசையில் பாத்ரூம்  சுத்தம் செய்வதும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் நாம் செய்யும் மற்ற வேலைகளை விட பாத்ரூம் சுத்தம் செய்யும் வேலை இருப்பதில் மிகவும் கடினமானது என்று நம்மில் சிலருக்கு தான் தெரியும். இவற்றை எல்லாம் தெரிந்தால் என்ன, தெரியாமல் இருந்தால் என்ன என்று யோசிக்காதீர்கள். இதுநாள் வரையிலும் இவ்வாறு புலம்பி கொண்டிருந்தவர்ளுக்கு இன்றைய பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்று எளிமையாக கிடைக்கும் பேக்கிங் சோடாவை வைத்து பாத்ரூமை எவ்வாறு சுத்தம் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாத்ரூம் சுத்தம் செய்ய டிப்ஸ்:

டிப்ஸ்- 1

பாத்ரூம் டைல்ஸ் கிளீன் செய்வது எப்படி

முதலில் 4 ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பேக்கிங் சோடாவில் மிதமான சூடு உள்ள தண்ணீரை அதில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கலந்து வைத்துள்ள பேஸ்டை பாத்ரூம் டைல்ஸ் மற்றும் அழுக்குகள் இருக்கும் இடத்தில் நன்றாக பிரஸினால் அப்ளை செய்ய வேண்டும். இதற்கு பிறகு 15 நிமிடம் கழித்து பாத்ரூம் சுத்தம் செய்யும் பிரஷினால் துடைத்தால் போதும் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.

வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கா..! அப்படினா இதை செய்யுங்க 

 டிப்ஸ்- 2

toilet cleaning tips in tamil

இரண்டாவது டிப்ஸ் எதற்கு என்றால் டாய்லேட் டைல்சினை சுத்தம் செய்வதற்கானது ஆகும். அதனால் ஒரு பவுலில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். 

இப்போது கலந்தது வைத்துள்ள கலவையினை அழுக்கு படிந்து காணப்படும் டைல்ஸில் தெளித்து பின்பு இதனை சுத்தம் செய்து விட வேண்டும். இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் ஆகுவதோடு மட்டும் இல்லாமல் துர்நாற்றமும் இல்லாமல் இருக்கும்.

பாத்ரூம் கிளீனுக்கும், வாசனைக்கும் பாட்டி சொன்னது என்னனு தெரியுமா 

டிப்ஸ்- 3

toilet cleaning tap in tamil

பாத்ரூம் பைப்புகள் அனைத்தும் துருபிடித்தோ அல்லது அழுக்காகவோ காணப்பட்டால் அதற்க்கு எலுமிச்சை மட்டும் பேக்கிங் சோடாவின் கலவை மிகவும் உகந்த ஒன்று.

பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…

அதனால் ஒரு பவுலில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த கலவையினை பாத்ரூம் பைப்புகளில் தெளித்து விட்டு பின்பு சுத்தம் செய்தால் போதும் பழைய குழாய்கள் அனைத்தும் பளிசென்று மாறிவிடும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement