Bathroom Cleaning Homemade Tips
நம்முடைய வீடுகளை நாம் தினமும் சுத்தம் செய்து பராமரித்து வருவோம். ஆனால் நாம் சுத்தம் செய்த சில மணி நேரங்களிலேயே அது மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். அந்த வகையில் பார்த்தால் நாம் சாதாரணமான முறையில் சுத்தம் வீட்டிற்கே இந்த நிலமை ஏற்படும் போது பாத்ரூமிற்கு சொல்லவா வேண்டும். தினமும் வீட்டில் என்ன வேலை செய்கிறோமே இல்லையோ ஆனால் மறக்காமல் பாத்ரூம் மட்டும் சுத்தம் செய்து விடுவோம். ஆனால் நாம் செய்யும் மற்ற வேலையினை விட பாத்ரூமை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒரு வேலையாக அனைவருக்கும் இருக்கிறது. அதனால் இன்று வெறும் 10 நிமிடத்தில் பாத்ரூமை எப்படி சுத்தம் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாங்க.!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூம் சுத்தம் செய்யும் முறை:
- வெதுவெதுப்பான தண்ணீர்- 2 கப்
- துணிக்கு பயன்படுத்தும் ஜெல்- 1 ஸ்பூன்
- Borax- 2 ஸ்பூன்
முதலில் ஒரு பவுலில் 2 கப் வெது வெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தண்ணீரில் 2 ஸ்பூன் Borax சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக குச்சினால் கலந்துக் கொள்ள வேண்டும்.
1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்
பின்பு 2 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள தண்ணீருடன் 1 ஸ்பூன் துணிக்கு பயன்படுத்தும் ஜெல்லினை கொண்டு நன்றாக மீண்டும் கலந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக 1/2 கப் எலுமிச்சை மற்றும் வினிகர் கலந்த தண்ணீரை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வரை குச்சியினால் கலந்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் பாத்ரூமை சுத்தம் செய்யக்கூடிய ஜெல் தயார்.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை உங்களுது பாத்ரூமில் தெளித்து பிரஸினால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்தால் போதும் 10 நிமிடத்தில் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.
மேலும் இதில் கலந்துள்ள எலுமிச்சை மற்றும் வினிகரின் கலவை ஆனது பாத்ரூமை எளிதில் பளிச்சென்று மாற்றிவிடும். ஆகையால் இனி கஷ்டமே இல்லாமல் எளிமையான முறையில் பாத்ரூமை சுத்தம் செய்து விடலாம்.
பாத்ரூம் கிளீனுக்கும், வாசனைக்கும் பாட்டி சொன்னது என்னனு தெரியுமா
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |