வாஷ்பேஷன் முதல் பாத்ரூம் வரை பளபளப்பாக இருக்க இந்த ஒரு லிக்விட் போதும்..!

அனைத்தும் பளபளப்பாக மாற டிப்ஸ்

ஹலோ நண்பர்களே..! என்ன தான் நாம் வெளியில் வேலைக்கு சென்றாலும் வீட்டில் இருக்கும் வேலையை பார்த்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கும். அதிலும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை வீட்டில் வேலைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதிலும் வீட்டில் இருக்கும் டைல்ஸ் தரை, பாத்ரூம் டைல்ஸ், வாஷ்பேஷன் போன்றவற்றில் அழுக்கு படிந்து விட்டால் அதை சுத்தம் செய்வது பெரிய வேலையாக இருக்கும். ஆனால் இனி அப்படி இருக்காது. ஏனென்றால் இந்த லிக்விட் மட்டும் போதும் ஒரே முறையில் அனைத்தும் பளபளப்பாக மாறிவிடும். அந்த லிக்விட் எப்படி செய்வது என்று பார்த்து வீட்டை பளபளப்பாக மாற்றலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாஷ்பேஷன் முதல் பாத்ரூம் வரை பளபளப்பாக மாற டிப்ஸ்: 

  1. கொக்கோகோலா
  2. சோடா உப்பு – 1 ஸ்பூன்
  3. Dishwash லிக்விட்

ஸ்டேப் – 1

வாஷ்பேஷன் முதல் பாத்ரூம் வரை பளபளப்பாக மாற டிப்ஸ்

முதலில் ஒரு 250 ml அளவுள்ள ஏதாவது ஒரு கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொள்ளவும். பின் அதில் இருந்து பாதி அளவிற்கு மட்டும் கொக்கோகோலாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப் – 2

அடுத்து அதில் ஏதாவது ஒரு Dishwash லிக்விடை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கொசுவை விரட்ட நியூ டெக்னீக்.. கொசுவர்த்தியை ஊறவைத்தால் போதும்

ஸ்டேப் – 3

வாஷ்பேஷன் முதல் பாத்ரூம் வரை பளபளப்பாக மாற டிப்ஸ்

அடுத்து அதில் 1 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4 

அவ்வளவு தான் லிக்விட் ரெடி. இப்போது இந்த லிக்விடை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து இந்த லிக்விடை உங்கள் வீட்டில் இருக்கும் வாஷ்பேஷன், பாத்ரூம் டைல்ஸ் இந்த மாதிரி இடங்களில் ஸ்ப்ரே செய்து துடைத்தால் அந்த இடத்தில் இருக்கும் கறை அப்படியே வந்துவிடும்.

1 முறை ட்ரை செய்து பாருங்கள். நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips