இதை மட்டும் செய்யுங்க இவ்ளோ நாள் பாத்ரூமை கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோமேனு யோசிப்பிங்க

Advertisement

இதை மட்டும் செய்யுங்க இவ்ளோ நாள் பாத்ரூமை கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோமேனு யோசிப்பிங்க | Bathroom Cleaning Tips and Tricks in Tamil

நண்பர்களே வணக்கம்.. பொதுவாக பலருக்கு வீட்டை கிளீன் பண்றது அப்படின்னாலே அழுத்துப்பாங்க. இதுல பாத்ரூமை சுத்தம் பண்றதுன்னா சொல்லவே வேண்டாம். பாத்ரூமை என்ன தான் சுத்தம் செய்தாலும் கறைபடிந்துகொண்டு தான் இருக்கும். பாத்ரூமை சுத்தம் செய்ய ரொம்ப சிரமம்படுறானு சொல்றவங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க பிரண்ட்ஸ் இன்றைய பதிவில் நாம் அழுக்கு மற்றும் கறைபடிந்த பாத்ரூமை எப்படி எளிமையாக சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க எளிமையான முறையில் பாத்ரூமை எப்படி சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. 5 ரூபாய் துணி சோப் – ஒன்று
  2. வினிகர் – 1/2 டம்ளர்
  3. சூடான நீர் – 1/2 டம்ளர்
  4. பேக்கிங் சோடா – ஒரு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

செய்முறை – Bathroom Cleaning Tips and Tricks in Tamil:

ஒரு காய் சீவும் பலகையை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் துணி சோப்பை நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும்.

இவ்வாறு துருவிய சோப்பை பிளாஸ்டிக் கப்பில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் 1/2 டம்ளர் வினிகர், 1/2 டம்ளர் சூடான நீர் மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

அவ்வளவு தான் பாத்ரூம் சுத்தம் செய்ய ஒரு கிளீனர் தயாராகிவிட்டது இதனை பயன்படுத்தும் முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் பாத்ரூமில் உள்ள டாய்லெட் பேஷனில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கிளீனரை இடைவெளி இல்லாமல் நன்றாக ஊற்றிவிட்டு வேண்டும். பிறகு டாய்லெட் பேஷனை சுத்தம் செய்ய பயன்படுத்து பிரஷை கொண்டு ஒருமுறை லேசாக தேய்த்துவிடவும். பின் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும். பிறகு மீண்டும் அந்த பிரஷை பயன்படுத்தி டாய்லெட் பேஷனை தேய்தோம் என்றால் டாய்லெட் பேஷனை மிகவும் பளிச்சென்று காணப்படும். இந்த முறையை வாரத்தில் ஒரு மட்டும் செய்தால் போதும் உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் பாத்ரூம் மற்றும் வீடு வாசனையாக இருக்க இந்த 1 பொருள் போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement