Bathroom Cleaning Tips in Tamil
பொதுவாக நாம் வாழும் இடத்தை அல்லது வீட்டை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல் நலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால் நாம் வாழும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பது நமது முக்கியமான கடமையாகும். அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிவறையை மிக மிக கவனத்துடன் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் அவற்றை சுத்தமாக பாராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்க வீட்டு பாத்ரூம் டைல்ஸ்களில் உள்ள உப்பு கறையை போக்க உதவும் மிகவும் எளிமையான குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Bathroom Tiles Cleaning Tips in Tamil:
உங்க வீட்டு பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்துள்ள உப்பு கறையை போக்க உதவும் எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- சீகைக்காய் – 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- ஷாம்பூ – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
பாத்ரூம் கிளீனுக்கும், வாசனைக்கும் பாட்டி சொன்னது என்னனு தெரியுமா
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சீகைக்காய்யை சேர்த்து கொள்ளுங்கள்.
தயிரை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக நீங்கள் சேர்கின்ற தயிர் நன்கு புளித்திருக்க வேண்டும்.
ஷாம்பூவை சேர்த்து கொள்ளவும்:
நாம் எடுத்து வைத்துள்ள ஏதாவது ஒரு வகையான 2 டேபிள் ஸ்பூன் ஷாம்பூவை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீரை கலந்து உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களில் தெளித்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து நன்கு தேய்த்து கழுவினீர்கள் என்றால் நீண்ட நாட்களாக படிந்துள்ள உப்பு கரையும் சட்டுனு நீங்குவதை நீங்களே காணலாம்.
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |