உப்பு கறை படிந்த பாத்ரூமை கிளீன் செய்ய சீயக்காய் மற்றும் புளித்த தயிர் இரண்டும் போதும்..!

Advertisement

பாத்ரூம் கிளிங் டிப்ஸ் – Bathroom Cleaning Tips Tamil 

வீட்டை சுத்தம் செய்யும் வேலைகளில் மிகவும் கடினமான வேலை எதுவென்றால் குளியல் மற்றும் கழிவறைகளில் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்குவதுதான். சுவர் மற்றும் தரைகளில் படிந்திருக்கும் கருப்பு நிற கறைகளை நீக்குவதற்கு பலர் ரசாயனங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் அது நாளைடைவில் தரை மற்றும் சுவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டும் இல்லாமல் இந்த ரசாயனங்கள் தோல் மற்றும் சுவாச பிரச்சனையை உண்டாக்கும். ஆகையால் இயற்கையான பொருட்களை உபயோகித்து உப்பு கறை படித்த பாத்ரூம் மற்றும் டாய்லட்டை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • சீயக்காய் தூள் – ஒரு கிண்ணம்
  • புளித்த தயிர் – 1/2 கிண்ணம்
  • ஷாம்பு – இரண்டு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பல வருடமாக நீக்க முடியாத பாத்ரூம் உப்பு கறையை நீக்க கோதுமை மாவு ஒன்று போதும்..

உப்பு கறை படிந்த பாத்ரூமை கிளீன் செய்ய இப்படி பண்ணுங்க..:

மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிடவும்.

குறிப்பு: இந்த கலவை செய்ய நீங்கள் எந்த வகையான சீயக்காய் தூள் மற்றும் ஷாம்புவை பயன்படுத்தலாம்.

கரைத்து வைத்துள்ள கலவையை உங்கள் வீட்டில் கிட்சன் சிங், குளியலறை, கழிப்பறை போன்ற இடங்களில் எங்கெல்லாம் உப்பு கறை படிந்துள்ளதா அங்கெல்லாம் இந்த கலவையை அப்ளை செய்துவிடவும்.

பிறகு 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நன்றாக ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு பிரஸ் அல்லது தேங்காய் நாரை கொண்டே தேய்த்து கழுவினால் போதும் உப்பு கறை அனைத்தும் நீங்கிவிடும்.

இந்த கலவையை டயில்ஸ் மார்பிள்ஸ் என எல்லா வகையான தரைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இயறக்கை பொருட்களை பயன்படுத்துவதினால் நமது உடலுக்கு எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படாது கண்டிப்பாக ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
துணிகளில் படிந்துள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க உப்புடன் இதை மட்டும் கலந்து தடவுங்க..

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement