பல வருஷமா படிந்துள்ள பாத்ரூம் கறைகளையும் 10 நிமிடத்தில் போக்க வினிகர் மட்டும் போதும்..!

Advertisement

Bathroom Cleaning with Vinegar in Tamil

பொதுவாக நாம் வாழும் இடத்தை அல்லது வீட்டை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல் நலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால் நாம் வாழும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பது நமது முக்கியமான கடமையாகும். அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிவறையை மிக மிக கவனத்துடன் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் அவற்றை சுத்தமாக பாராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்க வீட்டு பாத்ரூமில் உள்ள கறைகளை போக்கி மிகவும் சுத்தமாக வைத்து கொள்ள உதவும் மிகவும் எளிமையான குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Bathroom Cleaning Tips and Tricks with Vinegar in Tamil:

Bathroom Cleaning Tips and Tricks with Vinegar in Tamil

ஒருவரின் வீட்டில் உள்ள பாத்ரூம் மிகவும் சுத்தமாக இருந்தால் அவரின் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித உடல்நல பிரச்சனையும் ஏற்படாது. இதுவே ஒருவரின் வீட்டில் உள்ள பாத்ரூம் சுத்தமாக இல்லை என்றால் அவ்வளவு தான் அங்கு உள்ளவர்களுக்கு பலவகையான உடல்நல குறைபாடுகள் ஏற்படும்.

பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…

அதனால் தான் இங்கு மிகவும் எளிமையான முறையில் உங்க பாத்ரூமில் படிந்துள்ள கறைகளை போக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கல் உப்பு – 1 கைப்பிடி அளவு
  2. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. எலுமிச்சை பழம் – 1
  4. சலவைத்தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  5. ஸ்ப்ரே பாட்டில் – 1

வீட்டை எப்போதும் வாசனையாக வைத்துக்கொள்ள இதை செய்தல் போதும்

பாத்ரூம் டைல்ஸ் கிளீனிங்:

Bathroom Cleaning Tips and Tricks in Tamil

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கல் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

Bathroom Cleaning Tips in Tamil

பிறகு அதனை நாம் எடுத்துவைத்துள்ள ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் பத்துரூமின் டைல்ஸ், கதவுகள் மற்றும் பைப்புகள் ஆகியவற்றில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து லேசாக தேய்த்து தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்திர்கள் என்றால் உங்கள் பத்துரூமே புதிதாக மாறி இருக்கும்.

அடி பிடிச்சு கருகி போன பாத்திரத்தை Easy சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவுடன் இதை கலந்து பயன்படுத்துங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement